எரிபொருள் கோட்டா அதிகரிப்பு, ஜனாதிபதியின் பணிப்பு
புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான கைருப்புகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டுள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்கு கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்ட கோட்டா விநியோகிக்கப்படவுள்ளது. வாகனத்தின் வகை தற்போதைய கோட்டா பரிந்துரைக்கப்பட்ட புதிய கோட்டா THREE WHEEL (Special) 10 15 THREE WHEEL […]
தானத்தின் உச்ச தானம் உயிர் தானம்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையினை சேர்ந்த 7 வயது சிறுவன் மதுமிதனின் “TOF” என்னும் கொடுமையான இருதய நோயினால், சிறுவனும் குடும்பத்தாரும் பட்ட இன்னல்கள் சொல்லி அடங்காது. இவரின் நிலைமை கடுமையாவதினை அவதானித்து எனக்கு உடன் சத்திர சிகிச்சைக்கு பரிந்துரை செய்த வைத்திய கலாநிதி கார்த்திக் அவர்களுக்கும் – சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் காஞ்சன சிங்கப்புலி மற்றும் அவரது மருத்துவ குழுவிற்கும் நன்றி
நள்ளிரவு முதல் GAS விலை…
இன்று(04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 402 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 183 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. லாப்ஸ் எரிவாயுவின் விலையும் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் டபுள்யூ.கே.எச் வேகபிட்டிய தெரிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயுவின் விலையை மாற்றியமைத்ததன் பின்னர், தனது நிறுவனத்தின் எரிவாயு விலைகளும் திருத்தப்படும் என லாப்ஸ் நிறுவனம் […]
பின்லாந்து தேர்தல்:மத்திய வலது தேசிய கூட்டணி வெற்றி
பின்லாந்தில் நேற்று பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 22 கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,400 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். நாட்டின் பொருளாதாரம், அதிகரித்து வரும் கடன், காலநிலை மாற்றம், கல்வி, குடியேற்றம் மற்றும் சமூக நலன்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் தேர்தல் பிரசாரத்தின்போது அதிகமாக விவாதிக்கப்பட்டன. பிரதமர் சன்னா மரின் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, பெட்டேரி ஓர்போ தலைமையிலான மத்திய-வலது தேசிய கூட்டணி கட்சி மற்றும் ரிக்கா புர்ரா தலைமையிலான தி ஃபின்ன்ஸ் […]
அமெரிக்காவின் பல மாநிலங்களில் சூறாவளி எச்சரிக்கை
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை தாக்கிய சூறாவளி காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சூறாவளி நிலை காரணமாக சுமார் 400 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம், மிசிசிப்பி மாநிலத்தைத் தாக்கிய இதேபோன்ற சூறாவளியில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பல வீடுகள் மற்றும் சொத்துக்கள் கடுமையாக சேதமடைந்தன. அமெரிக்க வானிலை அதிகாரிகள் கூறுகையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற […]
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கை
டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அலரிமாளிகையில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற “DIGIECON 2030” வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை தொழில்நுட்ப அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் […]
ட்ரம்பிற்கு எதிராக குற்றவியல் வழக்கு?
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூயோர்க் நீதி மன்றம் ஒன்றினால் அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதன்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி இவர் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. 2016 தேர்தலுக்கு முன்னர் தனது தனிப்பட்ட வழக்கறிஞர் மூலம் ஆபாச திரைப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமெரிக்க […]
“இதுவே கடைசி சந்தர்ப்பம்”
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற “IMF மற்றும் அதற்கு அப்பால்” கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச […]
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும் வழங்கப்படுதல் அவசியம்
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற குறைந்த வருமானம் பெறும் 29 லட்சம் மக்களுக்கான அரிசி நிவாரணத்தில் கட்டாயமாக பெருந்தோட்ட மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும். இலங்கை நாட்டிலே உழைப்புக்கேற்ற ஊதியம் பெறப்படாமல் குறைந்த வருமானம் பெறுவது பெருந்தோட்ட மக்களே ஆகவே பெருந்தோட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்களிடமும் அரசாங்கத்திடமும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளேன் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை
பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.