ஜூபிடஸ் வெற்றி
(அந்துவன்) கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவலப்பிட்டி கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி பாடசாலை மைதானத்தில் அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கொத்மலை வலய கல்விப்பனிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள், மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேச […]
நாட்டை மேம்படுத்துவதற்கு அழைப்பு
இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார். மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச் செல்லும் என எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும் இந்நாட்டின் இளம் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார். ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த […]
விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழு (PHOTS)
விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார். விளையாட்டு, கல்வி அமைச்சர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் கூடியதாக மேற்படி குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டுத் தொகுதியைப் பார்வையிட இன்று (25) மேற்கொண்டிருந்த கண்காணிப்பு விஜயத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு […]
சதொச நிறுவனம் அதிரடி
இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி உள்நாட்டு சம்பா, வௌ்ளைப்பூடு, வௌ்ளை சீனி, கடலைப் பருப்பு, உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, நெத்தலி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. குறித்த விலை விபரங்கள் பின்வருமாறு… காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய் குறைக்கப்பட்டு 1,380 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை […]
இது வெறும் ஆரம்பம் தான் – ஜனாதிபதி
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி… இன்றைய […]
இலங்கை வங்குரோத்தான நாடல்ல…
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (21) […]
IPLல் : வியாஸ்காந்த்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு (RR) வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும், சர்வதேச விளையாட்டு வீரர்களின் அறிமுகங்களும் கிடைக்கப்பெற்றன. தற்போது IPL இல் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சு வீரராக […]
மண்சரிவுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பு கூற வேண்டும்
பூனாகலை கபரகலை தோட்டத்தில் மண்சரிவுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பு கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை மாற்றத்தினால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகுவது பெருந்தோட்ட மலையக பகுதிகளே இதனை நன்கு அறிந்தும் நேற்றைய தினம் நடைபெற்ற மண்சரிவு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஏன் முன்னறிவித்தல் விடுக்கப்படவில்லை? இதனை பாரியதொரு குற்றமாகவே […]
காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலி
பதுள, nபசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20) காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன் (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இன்று காலை 7.30 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் […]
பூனாகலை – கபரகலை தோட்டத்தில் மண்சரிவு
பண்டாரவளை – பூனாகலை – கபரகலை தோட்டத்தில் நேற்று இரவு மண்சரிவொன்று ஏற்பட்டது. அங்குள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட மண்சரிவில்,இதுவரையில் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்தும் தேடுதல் பணிகள் தொடர்வதாக எமது செய்தியாளர் கூறினார். இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள்; பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய அதிகாரிகளுடன் இணைந்து பிரதேச மக்கள் மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபை தலைவர் அசோக்குமார் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக வைத்திய […]