தோல்வி உறுதியாகியுள்ளது. அதனால்தான் தேர்தலை பிற்போடும் முயற்சியில் ஆளுங்கட்சி இறங்கியுள்ளது
(அந்துவன்) ” ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் – ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார். தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை […]
வருடாந்த செயல்திறன் நிகழ்வு
கொட்டக்கலையில் இயங்கி வரும் எம்.எஸ் சர்வதேச பாடசாலையின் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வருடார்ந்த செயல்திறன் நிகழ்ச்சிகள் கொட்டகலையில் எம்.எஸ்.முத்துக்கருப்பன் தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களின் கல்வி திறனையும், மாணவர்களின் திறமைகளையும் வெளிக்காட்டும் விதமாக இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பத்தனை ஸ்ரீபாத கல்லூரியின் உப பீடாதிபதி அன்டனி மெத்திவ்,தலவாக்கலை புனித பத்திரிசியார் பாடசாலை அதிபர் வணக்கத்துக்குறிய பிதா டொம்னிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதோடு பாடசாலையின் மாணவர்களுக்கு பரிசீல்களும் வழங்கி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து […]
தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம்
நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட இத் தொழிற்சாலையானது, தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் பார்க் தோட்ட முகாமைத்துவம் அதனை பொறுப்பேற்றது. அங்கு கழிவு தேயிலை அறைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையிலேயே இன்று (18.03.2023) அதிகாலை தொழிற்சாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டு, தீ கொளுந்துவிட்டு […]
மலையக பல்கலைக்கழகம் பற்றிய புதிய அறிவிப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனால் மலையகதில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் செயலணியின் கல்வி அபிவிருத்தி உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவது தொடர்பாகவும், அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்று இருப்பது தொடர்பாகவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மலையக மக்கள் இலங்கையில் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு ஒதுக்கப்பட்ட இனமாக இருந்த நிலையை மாற்றி அமைத்தது இலங்கை தொழிலாளர் […]
ரயில்வே பொது முகாமையாளரின் அறிவிப்பு
ரயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது தொடர்ச்சியான ரயில் சேவையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டபிள்யு.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். ரயில் சேவை அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சேவைக்கு சமூகமளிக்காத அனைவரிடமும் அது பற்றி விளக்கம் கோரவிருப்பதாகவும் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இன்று(15) 20 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்துள்ளார். பெலிஅத்த, காலி, அவிசாவளை, கண்டி, ரம்புக்கனை, அளுத்கம […]
PMD முக்கிய அறிவிப்பு
பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் நாடளாவிய ரீதியில் 265 இலங்கை வங்கிக் கிளைகள் மற்றும் 272 மக்கள் வங்கிக் கிளைகள் ஆகியன இன்று (15) இயங்குவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வழமையான முறையில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்காக 300 பெட்ரோல் மற்றும் டீசல் பௌசர்கள் தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது
(அந்துவன்) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது. அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவை திணைக்களம், வருமான வரி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்கள் இணைந்தே பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன. நியாயமற்ற வரி விதிப்புக்கு எதிர்ப்பு உட்பட பல […]
ஜனாதிபதி நன்றி
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாரிஸ் கழகம், ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் பாரிய சீர்திருத்தங்களை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். இலங்கையை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னர் கடன் வழங்குநர் குழுவுடன் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு கடன் […]
மருத்துவப் பயிற்சி தொடர்பில் ஜனாதிபதியினால் குழு
அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஏனைய பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக, போதனா வைத்தியசாலைகளாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான அரச வைத்தியசாலைகளை இனங்காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொலவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் ஏனைய உறுப்பினர்களாக, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் ஆர். எம்.சமன் குசும்சிறி ரத்நாயக்க, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்) வைத்தியர் […]
நடுநடுங்கும் அரசாங்கம்
அரசாங்கம் தேர்தல் என்ற உடனேயே ஓடி ஒளிந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் M.உதயகுமார் இன்றைய பாராளுமன்றில் தெரிவித்துள்ளார. “ஒரு சிறிய உள்ளூராட்சி தேர்தலை கண்டு நடுநடுங்கும் அரசாங்கத்தை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறோம் அரசாங்கம் தேர்தல் நடத்த தவறினாலும் நீதித்துறையின் அழுத்தம் காரணமாக தற்போது ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஜனாதிபதி பாராளுமன்றில் தேர்தல் குறித்து […]