IMFடம் இருந்து இலங்கை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள கடன் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் என சீனா மீண்டும் தெரிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாஓ நின்க் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது அவர் இலங்கை விடயத்தில் சீனா தலையீடு செய்வதை நிறுத்தி, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில்அண்மையில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாஓ நின்க் இதனை nதிவித்துள்ளார்.
“எங்கள்வேலையை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம். ஆகவே இந்த விடயத்தில் தலையிடுவதை அமெரிக்க நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.