நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்களைக் கொண்ட T20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
நேற்று இரவு அஹதபாத்தில் நடைபெற்ற 3 ஆவது T20யில் இந்திய அணி 168 என்ற அதிக ஓட்ட எண்ணிக்கையால் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிவி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட’இழப்பு;கு 234 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் சுப்மன் கில் வான வேடிக்கை நிகழ்தி ஆட்டமிழக்காது 7 சிக்ஸர்கள், 12 நான்கு ஓட்டங்களையும் விளாசி அதிகூடிய 126 ஓட்டங்களை பெற்றார்.
நியூசிலாந்து பந்து பந்து வீச்சாளர்கள் எவரும் பெரிதாக சோபிக்கவில்லை.
இதனையடுத்து 235 என்ற கடின இலக்கை நோக்கி பதிலளித்தாடிய கிவி அணி 12.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 66 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மண் கௌவியது.
சுப்மன் கில் ஆட்டநாயகனாகவும், ஹர்தீக் பாண்டியா தொடர்நாயகனாகவும் தெரிவானார்.