நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையடைந்துள்ளது.
நேற்று இரவு லக்னோவில் இடம்பெற்ற இரண்டாவது T20 யில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிவி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இந்திய பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட விரர்களை எழ விடாமல் தடுத்தனர்.
குறிப்பாக பாண்டியா, வோஷி, ஹூடா, சஹேல், குல்தீப், அர்சிதீப் மாவி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து 100 என்ற இலக்கை துரத்திய இந்தியா 19.5 ஓவர்வரை தடுமாறி 4 விக்கெட் இப்புக்கு 101 ஓட்டங்களைப் பெற்றது.
தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 ஆவது T20 பெப்ரவரி முதலாம் திகதி அஹதபாத்தில் நடைபெறவுள்ளது.