LPL2023  கிண்ணத்திற்கான இறுதி போட்டியில் விளையாடும் தகுதியை தம்புள்ளை ஆயோரா அணி பெற்று இருக்கிறது.

இன்று  காலி டைட்டன்ஸ் அணிக்கெதிராக களமிறங்கிய தம்புள்ளை அணி  நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதுடன் முதலில் காலி அணியை ஆட சொன்னது.

காலி அணி தனது 20 ஓவர்களில் 146 ஓட்டங்களை மட்டுமௌ பெற்றது.இதிலு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லசித் குரோசபுள்ளே சிறப்பாக ஆடினார் . அவர் 80 ஓட்டங்கள், பந்து வீச்சில் ஹேய்டன் கீர். மூன்று விக்கெட்டுகளையும் நூர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அரோரா அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டயது.

இதில் குசல் மென்டிஸ் 49 ஓட்டங்கள்  குசல் பெரேரரா 53 ஓட்டங்கள். ஆட்டநாயகனாக குசல் மென்டிஸ் தெரிவானார்.

யாழ் அணி வெளியேற்றம் , வனிந்து ஹசரங்க அதிரடி பந்துவீச்சு

பி லவு கண்டி மற்றும் யாழ் கிங்ஸ் அணிகளுகிடையிலான நேற்று கொழும்பில் நடைப்பெற்ற மற்றுமொரு போட்டியில் கண்டி அணி 51 ஓட்டங்களால் வெற்றியீட்டி  யாழ் அணியை தொடரிலிருந்து வெளியேற்றியது. Lpl தொடரில் முதற்தடவையாக யாழ் அணி இம்முறையே இந்த நிலைமைக்கு ஆளானது.

 

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி  20 ஓவர்களில் 8 விக்கெட்டைகளை இழந்து 188 ஓட்டங்கள் ( மொகமட் ஹாரீஸ் 79  ஓட்டங்கள் சந்திமால் 41 ஓட்டங்கள் பந்துவீச்சில் நுவன் துசார 4 விக்கெட்டுகள் தீக்சன 2 விக்கெட்டுகள்)

வெற்றி இலக்கான 189 ஓட்டங்களை பெறும் நோக்கில் ஆட வந்த யாழ் அணி வனிந்ந ஹசரங்க  பந்துக்கு தடுமாறியது.

17.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 127  ஓட்டங்களை பெற்றது

பந்து வீச்சில் வனிந்ந ஹசரங்க 9 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள்.

இன்று கண்டி காலி அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணி தம்புள்ளையுடன் இறுதி போட்டியில் விளையாடும்

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *