மக்கள் மீது வரியை சுமத்துவதை கைவிட்டு இதுவரை கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நிச்சயம் திருடர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.