T20 மகளீர் உலகக் கிண்ண போட்டிகளுக்கான பயிற்சி போட்டி ஒன்றில் இலங்கை மகளீர் அணி அயர்லாந்து மகளீர் அணியை தோற்கடித்துள்ளது.
இந்த போட்டியில் 2 ஓட்டங்களால் அயர்லாந்து மகளீர் அணியை இலங்கை மகளீர் அணி வென்றமை விசேட அம்சமாகும்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளீர் அணி இருபது ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றது.
இதற்கு பதிலளித்த அயர்லாந்து மகளீர் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 2 ஓட்டங்களால் தோல்வியடைந்தது