கல்வி அமைச்சு மீது குற்றச்சாட்டு
பாடசாலைகளைச் சுற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் உரிய பணியாளர்கள் இன்மையால் பாடசாலை தொடர்பான துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அந்த பாடசாலைகளுக்கு அருகில் கழிவுகள் குவிந்து டெங்கு நுளம்புகள் பரவுவது அதிகரித்துள்ளதாகவும்இ இது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை சுதந்திர ஆசிரியர் […]