இலங்கை ஒன்றிணைந்து பங்களிப்பை வழங்குவது முக்கியமானது

நெருக்கடி நேரத்தில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா  தெரிவித்துள்ளார். உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து நடத்திய மாநாட்டில் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார். நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு இலங்கை ஒன்றிணைந்து தமது பங்களிப்பை வழங்குவது முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தவறான கொள்கை முடிவுகள்-IMF இலங்கைப் பிரதிநிதிகள் குழு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் (ஐஆகு) தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக் கடன் நிவாரணம் கிடைத்துள்ள நிலையில்இ இலங்கையின் பொருளாதார நிலை படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. நீண்டகால பொருளாதார பிரச்சினைகள் மற்றும் தவறான கொள்கை முடிவுகளினால் இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்ததாக இலங்கைப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.