அமைச்சரவை வழங்கிய அனுமதி

நாவலப்பிட்டி – பஸ்பாகே கோறளை, ஹைன்போர்ட்  தோட்டக் காணியை வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கண்டி – நாவலப்பிட்டி, பஸ்பாகே கோறளையிலுள்ள 566 ஏக்கர்களுடன் கூடிய ஹைன்போர்ட்  தோட்டக் காணி, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கருத்திற்கொண்டு, குறித்த காணியில் 200 ஏக்கர் காணியை வௌ்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறக்கூடிய ஆபத்தான இடங்களில் வசிப்பவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் […]

சட்ட நடவடிக்கை: அரசாங்கம்

அத்தியாவிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது இதனை கூறியுள்ளார். “மின்சாரம், எரிபொருள், கேஸ் உள்ளிட்ட வரிசைகள் இப்போது குறைந்துள்ளன. கடந்த வாரமும் இது போன்றே அறிவிக்கப்பட்டது. அப்படி நடக்கவில்லை. ஆகவே சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பில் சிறந்த நிலைப்பாட்டில் உள்ளது அதனை குழப்பதற்கே சிலர் […]

மக்களுக்கு உடனடி நிவாரணம்

நெல் கொள்வனவு செய்ய மற்றும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்குவதற்கு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு ஓய்வூதியப் பணிக்கொடை நிலுவைத் தொகையை வழங்குவதற்கு போசாக்கின்மையை குறைப்பதற்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு- உடனடியாக நிதி வழங்க ஜனாதிபதி பணிப்புரை. தற்போதைய பொருளாதார நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, […]