பெருவின் முன்னாள் உள்விவகார அமைச்சருக்கு சிறைத்தண்டனை

1988 இல் ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்தமைக்காக பெருவின் முன்னாள் உள்விவகார அமைச்சரும் இரண்டு முறைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான  டேனியல் உரெஸ்டிக்கு (Daniel Urresti) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டு 34 வருடங்களின் பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக மோசமான சிவில் யுத்தத்தின் போது, மோதல் உக்கிரமடைந்த நிலையில் ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக டேனியல் உரெஸ்டிக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை […]