நிலநடுக்கம்…

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை​ 13 ஆக அதிகரித்துள்ளது. 100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஜுர்ம் நகரை மையமாகக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கம், பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவாகியுள்ளது. இரு நாடுகளிலும் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அருகே கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்து அருகே கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.  

2000 ஐ கடந்த உயிரிழப்பு

துருக்கியில் கடந்த திங்கட்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. மேலும், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் 9 மணி நேரத்துக்கு ஏற்பட்ட ஒரு பின்னதிா்வு வழக்கத்துக்கு மாறாக மிக சக்திவாய்ந்ததாக இருந்தது. ரிக்டா் […]