ICC இலங்கைக்கு டொலர்

ICC இலங்கைக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5வது இடத்துக்கானது. அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர் பரிசாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

தீக்ஷன முன்னேற்றம்

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகிஷ் தீக்ஷன T20 தரவரிசையில் முதல் 10 வீரர்களுக்குள் ஒருவராக இடம்பிடித்துள்ளார். ICC தரவரிசைக்கு கூடுதலாக, மகேஷ் தீக்ஷன T20  பந்துவீச்சாளர்களில் 10வது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்து அணியுடனான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 3 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 2020 பந்துவீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்திலும், வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ICCக்கு கடிதம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என விசாரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள், இணையத்தளங்கள் மற்றும் இலங்கையின் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடிதம் […]

இலங்கை அணிக்கு 20% அபராதம்

இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 /% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் ICC இந்த அபராதத்தை விதித்துள்ளது. இதனிடையே, இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனக்க குற்றச்சாட்டு தொடர்பான குற்றத்தை ஏற்றுக்கொள்வதால், குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை நீதிபதிகள் மேற்கொள்ள மாட்டார்கள் என ICC தெரிவித்துள்ளது.

Slc

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டில் 6.3 பில்லியன் ரூபாய்களை இலாபமாக ஈட்டியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது ஆண்டுக்கான அதிகப்படியான இலாபமான கருதப்படுகிறது.

தரவரிசையில் ஹசரங்க…

T20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கையணி வீரர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை பெற்றுள்ளார். 695 புள்ளிகளைப் பெற்றே அவர் முதலிடத்தை பிடித்துள்ளார். அதேபோல் சகலத்துறை வீரர்களுக்கான தரவரிசையில் வனிந்து 175 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தை பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான தர வரிசையில் ஹசறங்க 242 புள்ளிகளைப் பெற்று 7 ஆவது இடத்தில் நீடிக்கின்றார்..

இந்திய அணி மூன்று வடிவங்களிலும் நம்பர் ONE

நாக்பூரில் நடந்த டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது. இதன் மூலம் T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே முதலிடத்தில் இருக்கும் இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது. இந்தியா தற்போது 115 புள்ளிகளை பெற்றுள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியா (111), இங்கிலாந்து (106) உள்ளன. ICC டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியாவை பின் தள்ளி முதலிடத்தைப் பிடித்த பிறகு, இந்திய அணி மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 அணியாக மாறியது. ஒரே […]

இலங்கையணி வீரர்கள் நுவரெலியாவில்…

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் நுவரெலியா ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுப்பட்டனர். திர்வரும் நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக இந்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது. தம்புல்ல கிரிக்கெட் கழகத்தினால் நிர்வகிக்கப்படும் நுவரெலியா ரதெல்ல கிரிக்கெட் மைதானம் தேசிய அணியின் பயிற்சி நடவடிக்கைக்கு வழங்குதல் என்ற இணகக்ப்பாட்டுக்கு அமைய மேற்படி மைதானம் செப்பனிடப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.  

ICC

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் காப்பாளர் அனுஷ்கா சஞ்சீவனிக்கு சர்வதேச கிரிக்கெட் மகளிர் பேரவை (ICC) அபராதம் விதித்துள்ளது. T20 உலகக் கிண்ண தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது ICC ஒழுங்கு விதிகளை மீறியமையே இதற்குக் காரணம். இந்த ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அனுஷ்கா சஞ்சீவனி தனது ஒழுக்கக் குறியீட்டில் முதல் நிலைக் குற்றத்தைச் செய்ததாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அந்த போட்டியின் பங்களாதேஷ் […]

சந்திக ஹத்துருசிங்க

பங்களாதேஷ் அணியின் ODI மற்றும் டெஸ்ட் அணியின் பிரதான பயிற்சியாளராக இலங்கையணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹத்துருசிங்க 2014 தொடக்கம் 2017 வரை இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக கடமையாற்றினார். பின்னர் ஹத்துருசிங்க அவுஸ்திரேலிய பிராந்திய அணியான நிவ் சவுத்வேல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக கடமையாற்றினார். பங்களாதேஷ் அணியின் பிரதம பயிற்சியாளராக கடமையாற்றிய ரசல் டொமினிகோ அண்மையில் பதவி விலகியமை குறிப்பிடதக்கது.