ரணில் விக்ரமசிங்ஹவே நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர்: சச்சுதானந்தன்

நீலமேகம் பிரசாந்த் நாடு பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து உலக நாடுகளின் அனுதாபத்துக்கு உட்பட்ட நம் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுத்த நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியம் 7 பில்லியன் ரூபா நிதி வழங்க அனுமதி கிடைத்துள்ளமை ரணிலின் அனுபவமிக்க தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றி.ரணில் விக்ரமசிங்ஹ ஒருவரினாலேயே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில் நாடு […]

IMF – கடன் வசதி

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும். அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் இலங்கைக்கு இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது. இந்த மாத தொடக்கத்தில், […]

IMF

IFM அரசாங்கத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ள இணக்கப்பாட்டை எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளது. கேகாலையில் வைத்து இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய இதனை கூறியுள்ளாலர். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்க் கட்சிகள் அடங்களாக மாற்று கருத்துடையோரின் நிலைப்பாடுகளும் வெளிப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

IMF: பதில்…

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதி முதலாம் தவணைத் தொகையை வழங்குவது தொடர்யத்தின்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். வருமானம் ஈட்டும் போது […]

ஏற்பதா? இல்லையா?நீங்களே முடிவு செய்யுங்கள்?

சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக்  கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அவர்கள் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். இதன்படி, நாட்டுக்கான தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் தனது கடமையை இம்மாத இறுதிக்குள் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி […]

இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயார்

சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நோக்கிய இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் யெலன் கூறியுள்ளார் நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைப்பேசி கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.  

IMF – தீர்மானமிக்க கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று (02) இரவு, Zoom தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பில், அனைத்து தரப்பினரினாலும் சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் சீனப் பிரதமருடன் […]

புதிய வரி சீர்திருத்தம்-IMF

ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கிளை இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமையப்பெற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளையின் சிரேஷ்ட பிரதானி Peter Breuer, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை கிளையின் தலைமை அதிகாரி Masahiro Nozaki ஆகியோர் ஒன்றிணைந்த அறிக்கையொன்றை விடுத்துள்ளனர். அரசாங்கத்தின் […]

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும்

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம் கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் குறுகிய கால கடன் வசதிகளை செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசாரணைக்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், […]

பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளன

நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டிற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தை தவிர உலகில் வேறு எந்த நிறுவனமும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரத் தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகள் இருப்பின், அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிப்பதற் […]