IMF – விவாதத்திற்கு திகதி நிர்ணயம்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் கீழான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளும் விவாதத்திற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இன்று (20) காலை ஏப்ரல் 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்களிலும் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கூடவுள்ளது.

வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற தயார்

இலங்கையில் கடன் வழங்குபவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான தமது திட்டத்தை அறிவிப்பதற்காக ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நேற்று பிற்பகல் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீனா இலங்கைக்கு உறுதி

இலங்கைக்கு நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்க தயாராக உள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் அதன் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, சீன அமைச்சர் வேங் டொங்வேயும் (Wang Dongwei), இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, இலங்கைக்கான ஒத்துழைப்பை சீனா மீள உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே, சீன அமைச்சர் வேங் டொங்வேய் […]

இலங்கை ஒன்றிணைந்து பங்களிப்பை வழங்குவது முக்கியமானது

நெருக்கடி நேரத்தில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா  தெரிவித்துள்ளார். உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து நடத்திய மாநாட்டில் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார். நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு இலங்கை ஒன்றிணைந்து தமது பங்களிப்பை வழங்குவது முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆபத்தில் இருக்கும் நாடுகளுக்கான ஆதரவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் – IMF

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாஇ இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கருத்துக்களம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார். அங்குஇ சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணத்திற்கான இலங்கையின் உரிமை தொடர்பாக அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார். ‘முன்பு இல்லாத சவால்களை இப்போது எதிர்கொள்ளும் உறுப்பு நாடுகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். ஆபத்தில் இருக்கும் நடுத்தர வருமான நாடுகளுக்கான ஆதரவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். சமீபத்தில் உக்ரைன் மற்றும் இலங்கைக்கு எங்கள் ஆதரவை வழங்கினோம். அந்த நாடுகள் செயல்படுகின்றன. […]

தவறான கொள்கை முடிவுகள்-IMF இலங்கைப் பிரதிநிதிகள் குழு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் (ஐஆகு) தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக் கடன் நிவாரணம் கிடைத்துள்ள நிலையில்இ இலங்கையின் பொருளாதார நிலை படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. நீண்டகால பொருளாதார பிரச்சினைகள் மற்றும் தவறான கொள்கை முடிவுகளினால் இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்ததாக இலங்கைப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

“இதுவே கடைசி சந்தர்ப்பம்”

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற “IMF மற்றும் அதற்கு அப்பால்” கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச […]

சர்வதேசத்தின் நன்மதிப்பு கிடைத்துள்ளது

இலங்கைக்கு IMF உதவி கிடைத்ததன் மூலம் சர்வதேசத்தின் நன்மதிப்பு கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார. பாராளுமன்றத்தில் நேற்று (24) ஆற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றியய கல்வி இராஜாங்க அமைச்சர்… (இலங்கைக்கு IMF உதவி செய்யாது என தெரிவித்து எம்மை அதிர்ப்தி அடைய செய்தார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சோர்ந்து போகாது பகிரத முயற்சி எடுத்தார். IMF அங்கிகாரத்தின் ஊடாக இலங்கைக்கு சர்வதேச அங்கிகாரம் […]

IMF கடன் வசதியின் முதல் தவணை கிடைக்கப்பெற்றது

சர்வதேச நாணய நிதியத்தினால் இந்நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணை இன்று (23) நிதி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் நிதியமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை கடந்த தினம் அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMF உக்ரைனுடன் சுமார் 15.6 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளது

IMF உக்ரைனுடன் சுமார் 15.6 பில்லியன் டொலர் மதிப்பிலான நான்கு ஆண்டு நிதிப் பொதிக்கு ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக தொடர்ந்து தற்காத்துக் கொண்டிருக்கும் உக்ரைனுக்கு தேவையான நிதியை வழங்குகிறது. அதன்படி IMF நிர்வாக குழு வரும் வாரங்களில் இந்த ஒப்புதல் குறித்து கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.