IFM – இலங்கைக்கு…
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதியுதவி தொடர்பான தீர்மானமானது, கடன் நிவாரணம் தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கும் உடன்படிக்கைகளை பொறுத்தே அமையும் என சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. நீட்டிக்கப்பட்ட நிதி வசதி குறித்த பணியாளர் ஒப்பந்தம், கடனாளிகளிடமிருந்து தொடர்புடைய உடன்படிக்கைகள் பெறப்பட்டவுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று நிதியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அத்தியாவசியமான நிதி வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என சர்வதேச நாணய […]
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
202, 2023 ஆண்டுகளில் சீனாவுக்கு இலங்கை செலுத்த வேண்டியிருந்த கட்ன் மற்றும் அதற்கான வட்டியை பெற்றுகொள்ளாதிருக்க சீனா முன் வந்துள்ளது. இது தொடர்பில் இலங்கை நிதியமைச்சை தெளிவுப் படுத்தியுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிக்ஹிங் தெரிவித்துள்ளார். சலுகை அடிப்படையில் மேற்படி உதவியை வழங்குவதாக அவர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறியுள்ளார். இந்த சலுகை இலங்கைக்கு குறுகியகால உதவியகாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உதவியை சீனாவின் எக்சிம் வங்கியூடாக வழங்கவுள்ளதாக […]
பங்களாதேஷூக்கு IMF முதலாவது கடன்
இலங்கைக்கு பின்னர் அலுவலக மட்ட இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொண்ட பங்களாதேஷூக்கு சர்வதேச நாணய நிதியம் முதலாவது கடன் தவணையை இன்று விடுவித்தது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அலுவலக மட்ட இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொண்டது. பங்களாதேஷ் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி IMF-உடன் அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. பங்களாதேஷூக்கு 4.7 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் இன்று அறிவித்தது. அதன் முதலாவது தவணையாக […]
Imf
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதிலும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதிலும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவிற்கான (IMF) நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண சலுகைக்காக இலங்கை நிறைவேற்ற வேண்டிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றியுள்ளதாகவும் கடன் வழங்கும் பிரதான நாடுகளின் இறுதிச் சான்றிதழின் பின்னர் அது தொடர்பான […]