இரண்டாவது ODI
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ODI போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. நியூஸிலாந்தின், கிறைஸ்ட்சேர்ச் இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு இன்று காலை முதல் மழை குறுக்கிட்டதால் போட்டியை ஆரம்பிப்பதற்கு தடை ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதாக போட்டியை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் (ODI) போட்டியிலும் இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 3 போட்டிகளை கொண்ட ஒநநாள் தொடரை 2-0 என வென்று அசத்தியுள்ளது. கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இடம் பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியை இலங்கையணி வெற்றி கொண்டிருந்த போதிலும் இலங்கையணி அதை சாதகமாக பயன்படுத்த தவறியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி ஆரம்பத்தில் பொறுமையாக துடுப்பெடுத்து […]