இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் (ODI) போட்டியிலும் இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 3 போட்டிகளை கொண்ட ஒநநாள் தொடரை 2-0 என வென்று அசத்தியுள்ளது.

கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இடம் பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியை இலங்கையணி வெற்றி கொண்டிருந்த போதிலும் இலங்கையணி அதை சாதகமாக பயன்படுத்த தவறியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி ஆரம்பத்தில் பொறுமையாக துடுப்பெடுத்து ஆட யோசித்தாலும் இந்திய பந்து வீச்சாளர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.

அதாவது இன்றைய போட்டியில் அறிமுகம் பெற்ற நுவிந்து பெர்ணான்டோ 50 ஓட்டங்களை பெற்று அணிக்கு அடிதளம் இட்டு கொடுத்திருந்த போதிலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களை பெற்று ஏமாற்றமளித்தனர்.

இறுதியில் இலங்கையணி 50 ஓவர்கள் வரை தாக்;கு பிடிக்காமல் 39.4 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் பறி கொடுத்து 215 ஓட்டங்களை மாத்திரம் பெற்று கொண்டது.

நுவிந்துவுக்கு அடுத்தபடியாக குசால் மெண்டிஸ் 34 ஓட்டங்களை பெற்றார்.

இந்திய அணியின் பந்து வீச்சில் மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 216 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலளித்த இந்திய அணி ஆரம்பத்தில் ரோஹித், கோலி. ஐயர் போன்ற முன்னணி வீரர்களை இழந்து தடுமாறிய நிலையில் ராகுல், பாண்டிய ஆகியோர் நிதானத்துடன் ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

கே.எல். ராகுல் இறுதிவரை களத்தில் இருந்து ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கையணியின் பந்து வீச்சில் லஹிரு குமார மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆறுதல் அடைந்தனர்.

ஆட்டநாயகன் விருதை குல்தீப் யாதவ் வென்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *