பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் நாம் விசேட கவனம் செலுத்துவோம்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. புதிய அமர்வின் ஆரம்ப நிகழ்வு காலை 9.30 அளவில் ஆரம்பமானதுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வருகையே முதலில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகை காலை 9.40 அளவில் இடம்பெற்றது.. சபாநாயகர் ஜனாதிபதியை வரவேற்றார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை ஆற்றினார். “கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் […]
75 ஆவது சுதந்திர தின அரச விழாவின் செலவுகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை
75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் அரச விழாவைப் புறக்கணிக்குமாறு மக்களை கட்டாயப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போலிப் பிரச்சாரங்கள் குறுகிய அரசியல் செயல்முறையின் மற்றொரு தொடர்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது. பொய்யான தகவல்கள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்தி, அரசாங்கத்தை மக்கள் வெறுக்கச் செய்வதும், அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துவதன் […]
நவம் மஹா பெரஹர ஒரு சுப அடையாளம் – ஜனாதிபதி
ஆகஸ்ட் மாதம் எசல பெரஹர நடைபெறும் காலம் நெருங்கும் போது நாட்டுக்கு பொருளாதார நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். கொழும்பு கங்காராமை விகாரையின் நவம் பெரஹரா நேற்று (05) இரவு ஆரம்பமானது. இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நவம் பெரஹரா விழாவை வருடந்தோறும் நடத்துவது நாட்டுக்கு கிடைத்த பாக்கியம் என தெரிவித்த ஜனாதிபதி, இக்கட்டான காலத்தை கடந்து செல்வதற்கு இது பெரும் […]
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை
சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின உரை அல்ல. சுதந்திரம் கிடைப்பதற்கு அர்ப்பணித்த, கடுமையாக உழைத்த டி.எஸ். சேனநாயக்க உள்ளிட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தி, நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீழப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன். 75 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சுதந்திரம் பெற்றபோது, புகழ்பெற்ற […]
தலதா மாளிகையில் விசேட பூஜை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஆரம்பமாக கண்டி தலதா மாளிகையில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இதேவேளை, 75ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விக்டோரியா அணைக்கட்டுக்கு முன்பாக நடைபெற்ற சிறப்பு பிரித் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
ஆபிரிக்க கண்டத்துடனான உறவைப் பலப்படுத்துதல்
தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார். ஆபிரிக்க தூதுவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார கொள்கையின் புதிய கட்டம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, சிரமமான காலகட்டத்தின்போது இலங்கையும் ஆபிரிக்காவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கியமையையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். மேலும் இலங்கைக்கும் சில ஆபிரிக்க நாடுகளுக்கும் பொதுவான சட்ட முறைமை இருப்பதாகவும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார். ஆபிரிக்க […]
கரு ஜயசூரியக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது
முன்னாள் சபாநாயகரும் நன்மதிப்பிற்குரிய அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கரு ஜயசூரிய தேசத்திற்கு ஆற்றிய, சிறந்த சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கரு ஜயசூரிய அவர்களுக்கு பதக்கம் அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வின் போது ‘கரு ஜயசூரியவின் பெருமைமிக்க வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகள்’ எனும் […]
75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. நினைவு முத்திரையை வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவும் நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தனர். தபால் திணைக்களத்தின் பாரம்பரிய […]
சுமார் 109 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, நாளை (பெப்ரவரி 03 ஆம் திகதி) 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியுமே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன. இம்மாதம் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வழங்கிய […]
மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (02) முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்ததோடு அட்டப்பிரிகரவையும் அவருக்கு அன்பளித்தார். மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்காக பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்ததோடு மல்வத்து மகாநாயக்க வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க்கு விசேட […]