மீளாய்வுக் கலந்துரையாடல்
“முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் – உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்” தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், நிதி மேற்பார்வை மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்துதல், இறையாண்மை நிதித் துறையில் ஏற்படும் படிப்படியான அபாயத்தைக் குறைத்தல், சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களின் விநியோகக் […]
அரசாங்கத்தின் வருமானம்
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலன்புரி, மருந்துகள் மற்றும் கடன் கொடுப்பனவுகள் தவிர்ந்த, ஏனைய அனைத்துச் செலவுகளையும் தற்போது திறைசேரிக்கு ஏற்பது கடினம் எனவும் ஜனாதிபதி மேலும் […]
Imf
தற்போதுள்ள வரிகளை விடவும் அதிக வரிகளை விதிக்குமாறு IMF ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் மக்கள் மக்கள் பக்கம் இருந்து அவர்கள் தொடர்பில் சிந்தித்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். பொருளாதாரம் மீண்ட பின்னர் அரச ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சலுகைகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் இந்தியாவுடனும்;, சீனாவுடனும் பேசவுள்ளதாகவும் ஜனாதிபதி நேற்று நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாய வேலைத்திட்டங்கள்
அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை எந்த வகையிலும் சீர்குலைத்தால் நாடு கடந்த மே மற்றும் ஜூன் மாதம் போன்ற நெருக்கடிக்குள் சிக்குவதை தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாய வேலைத்திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின்படி நாடுகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் இவ்வாறு சீர்குலைக்கப்படலாம் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் […]
ஜனாதிபதி
ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில், பாராளுமன்றத்திற்கூடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராலும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியுமெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில், அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் என்றும் […]
பசுமை நகரங்களை உருவாக்கும் திட்டம் ஆரம்பம்
பசுமையான இலங்கையை உருவாக்கும் பொறுப்பை இளைஞர்களிடம் கையளிப்பதன் மூலம் 75வது சுதந்திர தினத்துக்கு இணைவாக தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எண்ணக் கருவின்படி முன்னெடுக்கப்படும் ‘ தேசிய இளைஞர் தளம்’ வேலைத்திட்டத்தின் கீழ் ,இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இளைஞர் பாராளுமன்றம் என்பன ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை […]
மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன்
வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சபாநாயகர், அமைச்சர்கள், நசீட் அஹமத், அலி சப்ரி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் […]