இலங்கை தொடர்பில் விசேட கலந்துரையாடல்
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாட்டில் இலங்கை தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இலங்கை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. மனித உரிமைகளை மீறல், பயங்கரவாத செயற்பாடுகள், நீதிமன்ற சுயாதீனம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான 52 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.
2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுகள் நடத்தி, இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த கோருகிறேன். மே 24, 2009 அன்று வெளியிடப்பட்ட அந்த கூட்டறிக்கையில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்தி 13ஐ அமுல் செய்து, அதை மென்மேலும் மேம்படுத்த […]