பதுளை வெவெஸ்ஸ தொழிற்சங்க பிரிவில் நீடித்த தொழிற்சங்க போராட்டத்துக்கு நேற்று தற்காலிக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தொழிற்சாலை அதிகாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலைக்கு தற்காலிக தீர்வு எட்டப்பட்டுள்ளது.

வெவெஸ்ஸ தோட்ட தொழிலாளர்கள் தேயிலை கொழுந்தின் நிறை அதிகரித்தல் மேலதிகமாக பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்தின் நிறைக்கு ஏற்றால் போல ஊதியம் வழங்கப்படாமை என பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த பிரச்சினைக்கும் நிர்வாகத்தின் ஏனைய கெடு பிடிகளுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

மேலும் தோட்டத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்வு பெறப்பட வேண்டும் அவ்வாறு நிலைமை சீர் செய்யப்படாவிடில் ஒத்துழையாமை போராட்டத்தை மேற்கொள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) தீர்மானித்துள்ளது என நேற்று களத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *