Xi Jinping

Share

Share

Share

Share

சீன ஜனாதிபதியாக ஷி ஜின்பிங் (Xi Jinping) தொடர்ந்து மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு இதுவரை இல்லாத வகையில், கடந்த ஒக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக 69 வயதான ஷி ஜின்பிங் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, சீன நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 14 ஆவது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 3,000 உறுப்பினர்கள் மீண்டும் சீன அதிபராக ஷி ஜின்பிங்கை தெரிவு செய்ய ஆதரவளித்துள்ளனர்.

ஷி ஜின்பிங்கிற்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சீன இராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஷி ஜின்பிங் மீண்டும் பொறுப்பேற்கிறார்.

மீண்டும் 5 ஆண்டுகள் சீனாவை ஷி ஜின்பிங் ஆட்சி செய்யவுள்ள நிலையில், சீனாவை அதிகக் காலம் ஆட்சி செய்த பெருமையை அவர் பெறுகிறார்.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்