துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,600-ஐ கடந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்கு முன்னுரிமையளித்து மீட்புக் குழுவினர் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
துருக்கியின் Hatay மாகாணத்தின் மருத்துவமனை ஒன்றுக்கு முன்பாக சடலங்கள் வரிசையாக கிடத்தி வைக்கப்பட்டுள்ளதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது.
துருக்கியில் இறப்பு எண்ணிக்கை 7,100 க்கு மேல் உயர்ந்துள்ளது. ஏற்கனவே 11 ஆண்டுகால போரினால் பேரழிவிற்குள்ளான சிரியாவில் தற்போதைய அனர்த்தத்தால் 2500-க்கும் அதிகாமானவர்கள் உயிரிந்துள்ளனர். மீட்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உயிரழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
துருக்கியின் 10 மாகாணங்களில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் (Tayyip Erdogan) அறிவித்துள்ளார்.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி – சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கத்தால் 2 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.