இரண்டு உயிர்களை பலிகொண்ட வாகன பேரணி

Share

Share

Share

Share

பதுளையில் பாடசாலை கிரிக்கட் போட்டிக்காக இடம்பெற்ற வாகன பேரணியின் போது ஜீப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் (01) உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் மேலும் 08 பேர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

பதுளையில் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கிடையிலான பாடசாலை கிரிக்கட் சுற்றுப்போட்டி இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

போட்டியுடன் இணைந்து நடத்தப்பட்ட வாகன பேரணியில் பயணித்த ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பதுளை புதிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

13ம் தரத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் ரவிது துலக்ஷன ஜயதிலக மற்றும் ஹரீந்திர ருக்மல் ஆகிய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்து: 260 பேர்...
பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும் –...
ரயில் விபத்து – 233 பேர்...
இன்று பொசன் பௌர்ணமி தினம்
தமிழகம் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவில்...
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி...