ஒருபக்கம் பொருட்களின் விலையேற்றம் மறுபக்கம் மின்சார கட்டண உயர்வு

Share

Share

Share

Share

நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் மக்களின் கழுத்தை இருக்கி பிடித்து நெருக்குவதாக மலையக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் நாட்டில் தற்போது விலைவாசி மலைபோல உயர்ந்துவிட்டது.செலவுக்கேற்ற வருமானம் இன்மையால் மக்கள் நாளாந்தம் தங்கள் உணவு பழக்க வழக்கத்தை மாற்றி உணவு முறையை கட்டுப்படுத்தி விட்டனர்.குறிப்பாக மலையக மக்கள் சொல்லெண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
ஒரு நாள் நிம்மதியாக சாப்பிட்டு உறங்கிய காலத்தை மறந்தவர்களாகி விட்டனர்.அதேபோல பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் இடைவிலகலும் அதிகரித்து விட்டது.இந்நிலையில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளமை மேலும் மலையக மக்கள் சுமை அதிகரித்துள்ளது. மீண்டும் குப்பி லாம்பு பயன்படுத்தும் நிலைக்கு சென்று விட்டனர்.
ஒரு ஸ்தீரமற்ற அரசாங்கத்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
மலையகத்தில் கல்வி நிலை தற்போது உயர்வான பாதையில் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் மின்சார அதிகரிப்பால் அதிக நேரம் மின்சார குமிழ்களை பயன்படுத்தி இரவில் படிக்க இயலாமல் மாணவர்கள் கஸ்டப்படுகின்றனர்.
ஒருபக்கம் பொருட்களின் விலையேற்றம் மறுபக்கம் மின்சார கட்டண உயர்வு என மலையக மக்கள் கழுத்தை இவ்வரசாங்கம் நெருக்கி பிடிக்கும் நிலை உருவாகியுள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்
லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை