வரலாற்றில் சிங்களத் தலைமைத்துவத்தை பாதுகாத்துத் தந்த தமிழ்த் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் நினைவுபடுத்தியிருந்தார்.

தமிழ்த் தலைவர்கள், சிங்களத் தலைமைத்துவத்தை உருவாக்கவும், இலங்கையை உருவாக்கவும் பாடுபட்டதாக சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, தமிழ் – சிங்கள கலாசாரத்தை வேறுபிரிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

யாழ் கலாசார மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,

”வெசாக் தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்திய பொன்னம்பலம் ராமநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இலங்கையர்களால் தெரிவுசெய்யப்பட்ட முதல் தலைவர் பொன்னம்பலம் ராமநாதன் ஆவார். சிங்கள பௌத்த தலைமைத்துவத்தை பொன்னம்பலம் ராமநாதன் பாதுகாத்துக் கொடுத்தார்.

ஹென்றி பேதீரிஸின் உயிரைப் பாதுகாக்காக பொன்னம்பலம் ராமநாதன் பாடுபட்டார். பொன்னம்பலம் அருணாச்சலம் இலங்கை தேசிய சபையை உருவாக்கினார். ஆனந்தகுமார சுவாமி வாழ்ந்த காலத்திலேயே சிங்கள கலை, சிங்கள மக்களுக்கும் உலகிற்கும் தெரியப்படுத்தப்பட்டது. அருணாச்சம் மகாதேவவும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்தத் தலைவர்கள் இலங்கையின் சிங்கள,பௌத்த தமிழ் இந்து பிரிவுகள் முன்னேற்றமடைய உழைத்தார்கள். இலங்கையர் என்ற வகையில் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதுபோன்று வைத்தியலிங்கம் துரைசாமியையும் எம்மால் மறக்க முடியாது. இலங்கை சுதந்திரமடைய உதவிய அமைச்சர் சுதந்திர லிங்கம், அமைச்சர் சிற்றம்பலம், நல்லய்யா ஆகியோரையும் மறந்துவிட முடியாது.” ஜி.ஜி. பொன்னலம்பலம், செல்வநாயகம், திருச்செல்வம் ஆகிய தலைவர்களையும் நினைவுபடுத்த வேண்டும். இந்தத் தமிழ்த் தலைவர்கள், ஏனைய தவைலர்களுடன் இணைந்து இலங்கையை உருவாக்குவதற்கு பாடுபட்டார்கள்.” என்று ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழ்த் தலைவர்களுக்கு புகழாரம் சூடிய ரணில் விக்ரமசிங்கவின் உரையின் தமிழாக்கத்தை இங்கே காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *