ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்களை மேற்கோள் காட்டி BBC செய்தி வெளியிட்டுள்ளது.

900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர்.

207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காயமடைந்தவர்கள் கோபால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் தகவல் கூறியுள்ளார்.

30 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 700 பேர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி இரங்கல்: ஒடிசா ரயில் விபத்தால் மனவேதனை அடைந்துள்ளேன். ரயில்வே அமைச்சர் உடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *