நீலமேகம் பிரசாந்த்
நாடு பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து உலக நாடுகளின் அனுதாபத்துக்கு உட்பட்ட நம் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுத்த நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியம் 7 பில்லியன் ரூபா நிதி வழங்க அனுமதி கிடைத்துள்ளமை ரணிலின் அனுபவமிக்க தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றி.ரணில் விக்ரமசிங்ஹ ஒருவரினாலேயே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில் நாடு அதளபாதாளத்தை நோக்கி சென்றது சில மாதங்களாக மக்கள் அல்லோலகல்லோல பட்டு கொண்டிருந்த வேளை ஜனாதிபதியாக பொறுப்பேற்று  மூழ்கும் கப்பலுக்கு நங்கூரம் போட்டு பாதுகாப்பது போல இந்நாட்டை நங்கூரம் போல மூழ்க விடாமல் தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றார்.
சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்க அனுமதி கிடைத்துள்ளமை நாட்டு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இனி வரும் காலங்களில் மக்கள் வழமை போல நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வழி பிறக்கும்.
ஆரம்பத்தில் விமர்ச்சிக்கப்பட்டு ஜனாதிபதியாக பதவியேற்றாலும் இன்று அவற்றை தவிடு பொடியாக்கி நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டார்.
இந்நாட்டை அபிவிருத்தி மிக்க நாடாக மாற்ற தற்போது ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்ஹவினால் மாத்திரமே முடியும் என இ.தொ.கா உபத்தலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *