இலங்கையில் கடன் வழங்குபவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான தமது திட்டத்தை அறிவிப்பதற்காக ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நேற்று பிற்பகல் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.