கிருஷ்ணா தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரில் சேமித்து வைத்து தேவைப்படும் போது சென்னை குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவு எட்டியது. மேலும் கண்டலேறு அணையில் இருந்தும் […]

உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரம் முக்கியமா..?

பிரதமர் மோடியை பற்றிய ஆவண படம் ஒன்றை பி.பி.சி. நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரண்டு பகுதிகளாக வெளியிட்டது. நாட்டின் 74-வது குடியரசு தினம் கடைப்பிடிக்க கூடிய சூழலில் இந்த ஆவணம் வெளியிட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. அதில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி விமர்சிக்கப்பட்டு இருந்தது இதற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காலனி மனப்பான்மையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து, பி.பி.சி. ஆவண […]

ஸ்கொட்லண்ட் வருகிறார்

பொதுநலவாய நாகளின் பொதுச் செயலாளர் பெட்டிஷியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் 5 நாள் பயணமாக இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பிற்கு இணங்க 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் அவர் கலந்துக்கொள்ளவுள்ளதாக பொதுநலவாய நாடுகள் காரியாலயம் தெரிவித்துள்ளது. பெட்டிஷியா ஸ்கொட்லண்ட் அடுத்த மாதம் முதலாம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளார். தனது விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

திருமுருகன்

விழுந்தாலும் மீண்டெழக்கூடிய அரசியல் தந்திரம், மந்திரத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நன்கு கற்றே வைத்துள்ளது. குறிப்பாக 1965 இல் நடைபெற்ற தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த சுதந்திரக்கட்சி 1970 இல் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அதுபோலவே இந்த உள்ளாட்சிமன்ற தேர்தல் ஊடாக எமது கட்சி எழுச்சிபெற்று – வீறுநடை போடும் –  என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், சமூக சேவையாளருமான சதாநந்தன் திருமுருகன் தெரிவித்தார். கட்சி ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே திருமுருகன் […]

சர்வகட்சிக் கூட்டம்

ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சிக் கூட்டம் இன்று(26) பிற்பகல் 04 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழ் தேசியக் […]

புலமைப்பரிசில் பரீட்சை

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. www.doenets.lk, www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களுக்குள் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீமட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த முறை புலமை பரிசில் பரீட்சைக்கு 334,805 பேர்p விண்ணப்பித்திருந்தனர். எனினும் 329, 668 பேர் பரீட்சைக்கு தோற்றினர். இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல்; […]

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியியாகியுள்ளதாக பரீமட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பார்வையிட முடியும் என nரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார. இதன்படி ஊவா, மத்திய, கேகாலை,, யாழ், மேல் மாகாணம்;; உள்ளிட்ட மாகாணங்களைச் சேர்ந்த சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். வெட்டு புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற தவறிய மாணவர்களை அதைரியப்படுத்தாது நம்பிக்கையை ஊட்டுவது எமது பொறுப்பாகும். சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதித்த […]