மலையக மக்களின் 200 வருட வாழ்வியலை பிரதிபலித்து அட்டனில் 1000ற்கும் மேற்பட்டோர் ஊர்வலம்n

இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை நினைவு கூர்ந்து அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை, கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்ட பாரிய ஊர்வலம் ஒன்று இன்று (29) திகதி நடைபெற்றது. குறித்த ஊர்வலம் அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பித்து அட்டன் நகர் ஊடாக அட்டன் டி.கே.டப்ளியு, கலாசார மண்டபத்தினை சென்றடைந்தது. குறித்த ஊர்வலத்தில் மலையகத்தை […]

Imf

தற்போதுள்ள வரிகளை விடவும் அதிக வரிகளை விதிக்குமாறு IMF ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் மக்கள் மக்கள் பக்கம் இருந்து அவர்கள் தொடர்பில் சிந்தித்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். பொருளாதாரம் மீண்ட பின்னர் அரச ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சலுகைகளை வழங்க  எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் இந்தியாவுடனும்;, சீனாவுடனும் பேசவுள்ளதாகவும் ஜனாதிபதி நேற்று நடைபெற்ற நிகழ்வில்  தெரிவித்துள்ளார்.