உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டுவர எடுத்த முயற்சி

உக்ரைன் -ரஷியா இடையிலான போர் பத்து மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரினால், இரு நாட்டு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டுவர எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை, இந்த நிலையில், உக்ரைனின் நொவைடர் நகர் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உள்ள மருத்துவமனை மீது உக்ரைன் படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், மருத்துவமனை தரைமட்டமானது. தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் […]

கியூபாவில் ஸ்பானிஷ் காலணி ஆதிக்கத்திற்கு எதிராக விழிப்புணர்ச்சி

லத்தீன் அமெரிக்க இலக்கியவாதியும், கியூபாவின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான ஜோஸ் மார்ட்டி, கடந்த 1853-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி கியூபாவில் உள்ள ஹவானா நகரில் பிறந்தார். தனது எழுத்துக்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் மூலம் கியூபாவில் ஸ்பானிஷ் காலணி ஆதிக்கத்திற்கு எதிராக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார். இவர் எழுதிய கவிதைகளும், புரட்சிக் கட்டுரைகளும் கியூப விடுதலைக்காக போராடிய கிளர்ச்சியாளர்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தன. இதனால் மார்ட்டிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஸ்பெயின் நாட்டிற்கு நாடு […]

கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம்

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று இன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட நபர் இன்று தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர் முன்னெடுக்கப்பட்டப்போதும் குறித்தப் பிரதேசத்தில் உள்ள ஒரு நபரினால் குறித்த நபர் சடலமாக கெசல்கமுவ ஓயாவில் மிதந்துக்கொண்டு இருந்ததை இனங்கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்தில் உயிரிழந்த […]

பூமிக்கு அருகே நெருங்கி வரும் வால் நட்சத்திரம்

50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். இந்த நீண்டகால வால்மீன் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மவுண்டுபலோமேரில் சுவிக்கிடிரான்சியன்ட் பெசிலிட்டி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காலம் 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு தற்போது இந்த வால்மீன் பூமி சுற்றுவட்ட பாதையில் வருகின்றது. கடந்த டிசம்பர் 2022-ம் ஆண்டு முதல் பிரகாசமாக தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஜனவரி மாதத்தில் மிகவும் அருகில் நெருங்கி வருகின்றது. இந்த […]

பெரு அதிபர் பதவி விலகக் கோரி தலைநகர் லிமாவில் மாபெரும் போராட்டம்

பெரு அதிபர் டீனா பொலுவார்டே பதவி விலகக் கோரி தலைநகர் லிமாவில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அதிபர் காஸ்டில்லோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதே போராட்டங்கள் துவங்கின. போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்களால் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் தினம் தினம் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் லிமாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் போலீசார் இடையே பெரும் மோதல் வெடித்தது. காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் […]

மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்?

ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸ். இவர் புதிதாக கட்டப்பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் இன்று திறக்க ஜஹர்சுஹுடா மாவட்டம் பிரஜாராஜ்நகரின் காந்தி சவுக் பகுதிக்கு வந்தார். மதியம் 12.30 மணிக்கு அப்பகுதிக்கு வந்த மந்திரி நபா தாஸ் காரில் இருந்து கிழே இறங்கினார். அப்போது, அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது, மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காரை விட்டு கீழே இறங்கிய உடன் அவர் மீது […]

திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுவை பொறுத்தவரை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் என இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும், இரு அணிகளும் தேர்தல் பணிக்குழுவை அறிவித்து தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் இருதரப்பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் […]

பாகிஸ்தானில் பேரூந்து விபத்து

பாகிஸ்தானில் இன்று (29) இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சுமார் 40 க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாட்டாவடா மாகாணத்தில் இருந்து கராச்சிக்கு சென்ற பஸ் வண்டியே இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ் சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமாகும்.

13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமைக்கு ஏதுவான காரணிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக கடமையாற்றிய காலத்தில் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாது, தற்பொழுது நடைமுறைப்படுத்த எத்தனிப்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக வழங்குவது தொடர்பில் ஆழமாக ஆய்வு 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக வழங்குவது தொடர்பில் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். ஜே.ஆர். […]

2,000 டெங்கு நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்ககூடிய சாத்தியக்கூறுகள்

யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா நாட்டில் டெங்கு நோயாளிகளின் தொகை அதிகரித்து வருவதாகதெரிவித்துள்ளார். வடக்கில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் நேற்றைய தினம் (28.01.2023) கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளிகளின் தொகையானது 2021 ஆம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு சமனாக காணப்படுகின்றது. அதேபோன்று யாழ்.போதனா வைத்தியசாலையிலும் 2023 ஆம் ஆண்டு […]