புனே-சோலாபூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பஸ் விபத்து

மராட்டிய மாநிலத்தின் புனே-சோலாபூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் சோலாபூரிலிருந்து புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ், புனேவின் யாவத் கிராமம் அருகே நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

U.S. – Victoria Nuland

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க*க்கும், அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்டிற்கும் (Victoria Nuland) இடையிலான கலந்துரையாடல் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நாடு எதிர்நோக்கும் மிகவும் கடினமான சூழ்நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார். இதன் போது, இலங்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு தமது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா […]

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன்

இந்தியப் பொருளாதாரம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது. பெண்கள், குழந்தைகள், பட்டியலின மக்களின் முன்னேற்றத்தை அடிப்டையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தியாவின் […]

4 புதிய கலப்பின அந்தூரியம் அறிமுகம்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மாகந்துறை விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சென்று அதன் ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளார். குளியாபிட்டிய மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிறுவனம் 44 புதிய கலப்பின அந்தூரியம் இனங்களையும் இரண்டு அன்னாசி வகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 44 அந்தூரியம் இனங்களுக்கு மேலதிகமாக மேலும் இரண்டு அந்தூரியம் இனங்களுக்கு லங்கா பியூட்டி மற்றும் லங்கா குமாரி என பெயரிடப்பட்டுள்ளதாக மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்னாசி வகைகளுக்கு இன்னும் […]

75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 3250 அதிதிகள்

75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் உள்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 3250 அதிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அதிதிகளும் உள்ளடங்குகின்றனர். அதிக பணம் செலவழித்து இந்த நிகழ்வை […]

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால்……?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய அரசாங்கம் சாதாரண மக்கள் மீது வரிகளைச் சுமத்தி, ராஜபக்சர்கள் திருடிய பணத்தை அறவிட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (31.01.2023) இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “எமது நாட்டைக் கட்டியெழுப்ப புதிய இலக்கும், தொலைநோக்குப் பார்வையும் தேவைப்பட்டாலும் நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரி […]

O/L Exam

பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை (O/L) தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீளாய்வுக் கலந்துரையாடல்

“முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் – உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்” தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல்  ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், நிதி மேற்பார்வை மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்துதல், இறையாண்மை நிதித் துறையில் ஏற்படும் படிப்படியான அபாயத்தைக் குறைத்தல், சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களின் விநியோகக் […]

மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்

பாகிஸ்தான் மசூதியில் நேற்று (30) நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. தலிபான் பயங்கரவாதி நடத்திய இந்த தாக்குதலில் 150 பேர் வரை காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெஷாவா் நகர மசூதியில் நேற்று (30) நண்பகல் வழக்கம் போல் தொழுகை நடந்து கொண்டிருந்தது. பலத்த பாதுகாப்பு மிக்க பெஷாவா் பொலிஸார் தலைமையக வளாகத்திற்குள் அமைந்துள்ள அந்த மசூதியில், […]

கிறிஸ்தவ மன்றத்தினர் இணைந்து அறிக்கை

மலையக மக்கள் நாட்டிற்கு  வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு  இலங்கை திருச்சபை, மெதடிஸ்ட் திருச்சபை மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தினர் இணைந்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம்  பெற்று 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வேளையில், மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பாகுபாடுகளை அகற்றுமாறு  இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையில் பல இன, பல மதங்களைக் கொண்ட இலங்கையின் சமமான குடிமக்களாக மலைய […]