TikTok

கனடாவில் அனைத்து அரசு வழங்கிய சாதனங்களிலிருந்தும் TikTok பயன்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இன்று முதல் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனித்துவம் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் TikTok செயழியை அகற்றுவதற்கு கடந்த திங்கள் 30 நாட்கள் அவகாசம் வழஙியது. அதேபோல் ஐரோப்பிய ஆணைக்குழுவும் மார்ச் 15 ஆம் திகதி முதல் தமது ஊழியர்கள டிக் டொக் பாவிப்பதை தடை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

BLUE MOUNTAIN அணி நடத்திய மென்பந்து கிரிக்கெட் போட்டி

BLUE MOUNTAIN அணி நடத்திய மறைந்த (அருள் ராஜ்) கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் கிண்ணத்தை பண்டாரவளை SuperYouth அணி வெற்றிக் கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தை RCC Attampitiya அணியும் பெற்றன. மேற்படி இரண்டு அணிகளுக்கும் வெற்றி கிண்ணங்களும் பண பரிசில்களும் வழங்கப்பட்டன. அதேபோல் சிறந்த துடுப்பாட்ட வீரராக சுப்பர் யூத் அணியின் நயன சஸாங்கவும் (Nayana Sasanka) சிறந்த பந்து வீச்சாளராக அதே அணியின் ஜனித்தும் (Janith) தெரிவாகினர். இதன்போது BLUE MOUNTAIN அணியின் […]

பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி

235ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் படி, வரைவிலக்கணம் கூறப்பட்ட ஏதேனும் துறைமுகத்தினுள் இருக்கும் கலத்திலிருந்து உணவுப் பொருள் அல்லது பானம், அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் என்பவற்றுள் எவற்றையும் வெளியேற்றுதல், கொண்டுசெல்லல், தரையிறக்குதல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், அகற்றுதல் என்பதற்காக, தெருக்கள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புகையிரதப் பாதைகள் உட்பட தெரு மூலமான, புகையிரத மூலமான அல்லது வான் மூலமான போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை வழங்குதலும் பேணுதலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய […]

கங்காராம விகாரையில் விசேட சமூக சமையலறை (Photos)

கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில், விசேட சமூக சமையலறை நிகழ்ச்சியொன்று, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்றது. கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் 05 கிராமிய உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர்உள்ளிட்ட 2300 பேருக்கு தினசரி போஷாக்கான உணவை வழங்குவதற்காக ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையை மையமாகக் கொண்டு […]

QR – இரத்து? எவ்வித தீர்மானமும் இல்லை

எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் QR முறைமையை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதியுடன் இரத்து செய்வதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தற்போது காணப்படும் கோட்டா முறைமையை கட்டம் கட்டமாக அதிகரிப்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கால்வாயில் நீராடச் சென்ற இளைஞர் மரணம்

நண்பர் ஒருவருடன் நானுஓயா டெஸ்போட் கால்வாயில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். நானுஓயா டெஸ்போட் தோட்டத்தின் மேல் பகுதியைச் சேர்ந்த மகதேவன் சதீஷ்குமார் என்ற 18 வயதுடைய இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு பகுதியில் தொழில் செய்து வந்த உயிரிழந்த இளைஞன், நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவருடன் டெஸ்போட் கால்வாயில் பிற்பகல் 1 மணியளவில் நீராடச் சென்றுள்ளார். நீராடச் சென்ற இளைஞன் திடீரென கால்வாயில் மூழ்கி […]

ஒருபக்கம் பொருட்களின் விலையேற்றம் மறுபக்கம் மின்சார கட்டண உயர்வு

நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் மக்களின் கழுத்தை இருக்கி பிடித்து நெருக்குவதாக மலையக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் நாட்டில் தற்போது விலைவாசி மலைபோல உயர்ந்துவிட்டது.செலவுக்கேற்ற வருமானம் இன்மையால் மக்கள் நாளாந்தம் தங்கள் உணவு பழக்க வழக்கத்தை மாற்றி உணவு முறையை கட்டுப்படுத்தி விட்டனர்.குறிப்பாக மலையக மக்கள் சொல்லெண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். ஒரு நாள் நிம்மதியாக சாப்பிட்டு உறங்கிய காலத்தை மறந்தவர்களாகி விட்டனர்.அதேபோல பாடசாலைக்கு செல்லும் […]

பண்ணையில் தீ- பல ஏக்கர் புற்தரை நாசம்

(அந்துவன்) தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்துள்ளது. அட்டன் – நுவரெலியா பிரதான பாதையில் காணப்படும் இந்த புற்தரையில் நேற்று (26)  பிற்பகல் ஏற்பட்ட தீயின் காரணமாக இந்த பிரதேசம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன்போது இந்த பண்ணைக்கு அருகிலுள்ள கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையம் வரை தீ பரவியதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் சுமார் ஒரு மணித்தியாலம் நிறுத்தப்பட்டதுடன் […]

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

(அந்துவன்) மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் நுவரெலியா – கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று (26) காலை முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கந்தப்பளை பிரதேச பொதுமக்களுடன் இணைந்து, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள், எதிர்ப்புகளை பதாகைகளை ஏந்தியவாறு […]

கடுப்பில் நாமல்

தேவையற்ற விதத்தில் சொத்துக்களை சேர்க்கவில்லை எனவும் அவ்வாறு சேர்த்திருப்பதாக கூறுவோர் அதை நிரூபிககுமாறும் பா.உ நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேற்படி குற்றச்சாட்டுகளை தனது குடும்பத்திர் இழைக்கவில்லை எனவும் அவ்வாறான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்த சொத்துக்களை அரச உடைமையாக்க கையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆகவே தனது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களை சத்தியக் கடதாசி மூலம் நிராகரிக்க தயார் எனவும் ஹம்மாந்தோட்டையில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.