அமெரிக்க திறைச்சேரி செயலாளர்

இந்த நேரத்தில் இலங்கைக்கு நிதி நிவாரணம் தேவை என அமெரிக்க திறைச்சேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெங்களுருவில் இன்று (23) ஆரம்பமான G-20 குழுவின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கேற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜீவன் உடன் பணிப்புரை

பதுளை, எட்டாம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குறைப்பாடுகளை வெகுவிரைவில் நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், எட்டாம்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அண்மையில் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது அங்கு நிலவும் சில குறைப்பாடுகள் சம்பந்தமாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இவற்றை உடன் நிவர்த்தி […]
குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம்

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. மேற்படி இலவச உணவு திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 15 ஆயிரம் சிறார்கள் பயன்பெறுவார்கள். அதன்பின்னர் ஏனையோரையும் உள்வாங்குவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கமைய, சுகாதார மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் […]
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாவிட்டால் நாடொன்று எஞ்சாது

அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியை இதுவரை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற விவாதத்தில் இன்று (23) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அரசியலுக்கு அன்றி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே தான் முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாவிட்டால் நாடொன்று எஞ்சாது எனவும் வலியுறுத்தினார்.
குணதிலகவுக்கு சிட்னி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 31 வயதான குணதிலக்க தனது பிணை நிபந்தனைகளை மாற்றுமாறு கோரி இன்று (23) மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார். அவர் மீது நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையிவல் அவர் இதுவரை குற்றங்களை ஒப்புக்கொள்வில்லை.
Icc T20

தென்னாபிரிக்காவில் இடம்பெறும் ICC மகளீர் T20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. அதன்படி முதல் அரையிறுதியில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய மகளீர் அணிகள் இன்று மாலை கேப்டவுனில் மோதவுள்ளன. அதேபோல் நாளை இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க மகளீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அரையிறுதியில வெற்றி பெறும் அணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் மோதவுள்ளன.
ஜனாதிபதி அழைப்பு (Photos)

இன்னும் 25 வருடங்களில் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து ” அபிவிருத்தியடைந்த நாட்டை” கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு போட்டி எண்ணத்தை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களையும் […]
France Teacher Death

பிரான்சில் பாடசாலை மாணவர் ஒருவரால் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 50 வயதான ஸ்பெயின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 16 வயதுடைய மாணவன் தனது பையில் இருந்து கூரிய ஆயூதத்தால் ஆசிரியர் கற்பிக்கும் வகுப்பறைக்கு சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
சென்னை அண்ணா சாலையில்…நில அதர்வு எதுவும் ஏற்படவில்லை

சென்னை அண்ணா சாலையில் இன்று காலை 10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் உள்ள யூனியன் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக, அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதேபோல், அண்ணாநகரிலும் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால், ஊழியர்கள் வெளியேறினர். மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், நில அதிர்வு ஏற்படும் […]
மனிதாபிமான நன்கொடை (Photos)

நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இடம்பெற்றது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 20 மில்லியன் லீற்றர் டீசலை வழங்கவுள்ளதாகவும் தற்போதைய […]