நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது கூட்டு பொறுப்பு

காலநிலை மாற்றம், மனித செயற்பாடுகள் உள்ளிட்ட காரணிகளால் நீர்வளத்துக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, நீர்வளத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். உலக நீர் தின விழா இன்று (22) இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் இடம்பெற்றது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏற்பாடு […]
கனடாவிலேயே சிறந்த வாடிக்கையாளர்களை கொண்ட பகுதி

ஹாமில்டன் நகரம் நான்காவது இடத்திலும் எட்மண்டன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. மேலும், கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில், தற்போது சில நகரங்கள் பட்டியலில் இருந்து சரிவடைந்துள்ளதாக உபெர் நிர்வாகிகள் கூறுகின்றனர். சிறந்த வாடிக்கையாளர்களை கொண்ட நகரங்களில் முதல் ஐந்து இடங்களில் வின்னிபெக் மற்றும் ஹாலிஃபாக்ஸ் இடம்பிடித்துள்ளது. ஆனால் Red Deer பகுதி இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு சரிவடைந்துள்ளது. மேலும், மிக மோசமான வாடிக்கையாளர்கள் கொண்ட நகரங்களில் ஒன்றாக தெரிவாகியிருந்த லண்டன் நகரம் தற்போது அதில் இருந்து […]
கனடாவில் பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்வு உச்சம் தொடலாம்

கனடாவில் உணவு பண்டங்களுக்கான விலையில் மாற்றம் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. நுகர்வோர் விலைக் குறியீடு பிப்ரவரி மாதம் 5.2 சதவீதமாக பதிவான நிலையில் ஜனவரியில் 5.9 சதவீதம் என பதிவாகியிருந்தது. பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்வு உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிபுணர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது. பணவீக்கம் சரிவடைந்து காணப்பட்டாலும், அதன் தாக்கம் பொருட்களின் விலையில் பிரதிபலிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த பிப்ரவரியில் உணவு பண்டங்களின் விலை 10.6 […]
கனடாவின் ஹாலிபாக்ஸ் பகுதியில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து

கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணம் ஹாலிபாக்ஸ் பகுதியில் உள்ள பள்ளியில் நேற்று முன்தினம் வழக்கம் போல் இயங்கியது. அப்போது ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது மாணவன் ஒருவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை குத்தினான். இதனால் பயந்து போன மாணவர்கள் கூச்சலிட்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். இதனையடுத்து அருகில் உள்ள வகுப்பறையில் இருந்த ஆசிரியர் வந்து மாணவனை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த மாணவன் கத்தியால் குத்தினான். […]
தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட மேக்ரான் மறுமலர்ச்சி கட்சி

அதிபர் மேக்ரான் தலைமையிலான ஆட்சி பிரான்சில் 2-வது முறையாக நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் அறிமுகம் செய்த ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்த வழிவகை செய்கிறது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் வன்முறை சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. இந்த விவகாரத்தில் மேக்ரான் தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த […]
நிலநடுக்கம்…

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஜுர்ம் நகரை மையமாகக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கம், பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவாகியுள்ளது. இரு நாடுகளிலும் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிரம்ப் மீது கிரிமினல் வழக்குப் பதிவு

அமெரிக்காவில் 2017 ஆண்டு முதல் 2021 வரை ஜனாதிபதியாக இருந்த டிரம்ப், 2016-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தன்னுடன் நெருக்கமான உறவில் இருந்ததாக பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்திருந்தார். இதை மறுத்த டிரம்ப், இது பற்றி மேலும் பேசாமல் இருக்க நடிகைக்கு, கட்சியின் பிரசார நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், பாலியல் தொடர்பை மறைக்க ஆபாச […]
பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதிகளை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானில் பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லமாபாத், ராவல் பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹட், லக்கி மார்வட் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, உத்தர பிரதெசத்தில் இரவு ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இரவு […]
IMF உக்ரைனுடன் சுமார் 15.6 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளது

IMF உக்ரைனுடன் சுமார் 15.6 பில்லியன் டொலர் மதிப்பிலான நான்கு ஆண்டு நிதிப் பொதிக்கு ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக தொடர்ந்து தற்காத்துக் கொண்டிருக்கும் உக்ரைனுக்கு தேவையான நிதியை வழங்குகிறது. அதன்படி IMF நிர்வாக குழு வரும் வாரங்களில் இந்த ஒப்புதல் குறித்து கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது ஒரு புதிய பயணம்…

• கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழாத வகையில் சட்டதிட்டங்களையும் பின்னணியையும் ஏற்படுத்தி, நாடு கட்டியெழுப்பப்படும். • இலங்கை, பொருளாதார தொங்கு பாலத்தை கடக்க தான் செயல்பட்டதை இன்று சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. • தற்போதைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலன் மக்களுக்கு விரைவில் கிடைக்கும். • சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு நிதானமாகச் செயல்பட்ட மக்களுக்கு நன்றிகள் – பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிப்பு “நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி […]