பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது

(அந்துவன்) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது. அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவை திணைக்களம், வருமான வரி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்கள் இணைந்தே பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன. நியாயமற்ற வரி விதிப்புக்கு எதிர்ப்பு உட்பட பல […]

Bangladesh won by 16 runs

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்றிரவு மிர்பூரில் இடம்பெற்ற 3 ஆவது T20யில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 3-0 என பங்களாதேஷ் அணி வெற்றி கொண்டுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்குடி 158 ஓட்டங்களை பெற்ளறது. இதனையடுத்து 159 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 […]

தேவைக்கேற்ப பேருந்துகள்

பொது மக்கள் சிரமமின்றி பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இன்று (15) தேவைக்கேற்ப தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத துறையினர் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட்டுள்ளதால் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையும் பொது மக்களின் நலன்கருதி மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]

ஜனாதிபதி நன்றி

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாரிஸ் கழகம்,  ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் பாரிய சீர்திருத்தங்களை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். இலங்கையை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னர் கடன் வழங்குநர் குழுவுடன் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு கடன் […]

மன்னர் முன்னாள் பாடப்பட்ட நம் நாட்டு பாடல்

இந்த முறை இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அண்மையில் பொது நலவாய தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மன்னர் மூன்றாம் சார்லஸ் உட்பட பல அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதன்போது இலங்கை கலைஞர்களான ரொஷானி மற்றும் நுவன் ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு பாடலை பாடி அசத்தினர்.

வேலை நிறுத்தம்…

சுகாதாரத் துறை, துறைமுகம், மின்சாரம், குடிநீர், ரயில்வே, தபால், வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று காலை முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தங்கள், மின்சாரக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதியர்கள், ஆய்வக சேவைகள், மருத்துவமனை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார […]

தொழிற்சங்க போராட்டம்…

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. ஆரசாங்கத்தின் புதிய வரி விதிப்பு உள்ளிட்ட பல காரணங்களுசக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதேவேளை, இன்று (15) 10 அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்றைய தினத்தை (15) பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த […]

மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் எடுத்துள்ள முடிவு

மேல் மாகாணத்தில் நாளை (15) நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நாளை பரீட்சைக்கு வருவதற்கு ஏற்படக்கூடிய போக்குவரத்து இடையூறுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை (15) நடைபெற இருந்த 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெற உள்ளது. அத்துடன், நாளை நடைபெறவிருந்த 9 வகுப்பு மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் […]

நீர்மூழ்கிக் கப்பல்களை அடுத்த தலைமுறை உருவாக்கும் தீர்மானம்

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அடுத்த தலைமுறை உருவாக்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுளே மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளன. மேற்படி மூன்று நாடுகளும் இணைந்து உருவாக்கிய OAKS ஒப்பந்தத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து இந்த மூன்று நாடுகளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் தாக்கத்திற்கு எதிராக தாக்குதல் திறன்களை வளர்க்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை: அரசாங்கம்

அத்தியாவிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது இதனை கூறியுள்ளார். “மின்சாரம், எரிபொருள், கேஸ் உள்ளிட்ட வரிசைகள் இப்போது குறைந்துள்ளன. கடந்த வாரமும் இது போன்றே அறிவிக்கப்பட்டது. அப்படி நடக்கவில்லை. ஆகவே சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பில் சிறந்த நிலைப்பாட்டில் உள்ளது அதனை குழப்பதற்கே சிலர் […]