சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிரடி தகவல்

மார்ச் மாதத்தின் முதல் 6 வாரங்க்களுக்குள் இலங்கைக்கு 24,3363 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 5,783 ஆகும். நேற்று இரவும் சீன சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள 7 நாட்கள் இலங்கையில் சுற்றுலா செய்யவுள்ளனர். அதேபேல் சீனாவின் இஸ்டன் விமான சேவை இலங்கைக்கு வாரத்தில் 6 விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

சீனாவின் புதிய பிரதமர்

சீனாவின் புதிய பிரதமராக லீ கியாங் (Li Qiang) அறிவிக்கப்பட்டிருக்கிறார். புதிய பிரதமராகச் சீன பாராளுமன்றம் இன்று அவரை உறுதிப்படுத்தியது. முன்னையப் பிரதமர் லீ கெச்சியாங்கின் இரண்டு தவணைப் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து லீ கியாங் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சீன பாராளுமன்றத்தில் இன்று அவருக்கு ஆதரவாக 2,936 பேர் வாக்களித்தனர். மூன்று பேர் அவரை எதிர்த்து வாக்களித்தனர். எட்டுப் பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

பின் வரிசை துடுப்பாட்டம் நியூசிலாந்தை காப்பாற்றியது

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறும் முதல் டெஸ்டின் இரண்டாவது நாள் இன்றாகும். போட்டியில் இலங்கை முதல் இனிங்சில் 355 ஓட்டங்களையும் நியூசிலாந்து 373 ஓட்டங்களையும் பெற்றன. இதன்படி இலங்கையணி இப்போதைக்கு 32 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியின் முதல் இனிங்ஸ் துடுப்பாட்டத்தில் டேரல் மிச்சேல் (Daryl Mitchell ) 102 ஓட்டங்களை பெற்றதுடன் இலங்கையின் பந்து வீச்சில் அஷித பெர்ணான்டோ 4 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பெருந்தோட்ட மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என ஐக்கிய மக்;கள் முன்னணியின் தலைவர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (10) நடைப்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே இராஜாங்க கல்வி அமைச்சர் இதனை கூறினார். தற்போதைய நிலையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்துவதை காட்டிலும் மாகாண சபைகளுக்கான தேர்தலை வலியுறுத்துவதே அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்து […]

A/L பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும்

உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு விடயத்தையும் வரிப்பிரச்சினையுடன் சேர்த்து குழப்ப வேண்டாம் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கல்வி அமைச்சர் […]

நடுநடுங்கும் அரசாங்கம்

அரசாங்கம் தேர்தல் என்ற உடனேயே ஓடி ஒளிந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் M.உதயகுமார் இன்றைய பாராளுமன்றில் தெரிவித்துள்ளார. “ஒரு சிறிய உள்ளூராட்சி தேர்தலை கண்டு நடுநடுங்கும் அரசாங்கத்தை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறோம் அரசாங்கம் தேர்தல் நடத்த தவறினாலும் நீதித்துறையின் அழுத்தம் காரணமாக தற்போது ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஜனாதிபதி பாராளுமன்றில் தேர்தல் குறித்து […]

தேர்தலுக்கு பயமில்லை முடிவுகளுக்கே பயம்

அரசாங்கம் தேர்தல் முடிவுகளுக்கு பயந்தே உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தவில்லை எனமக்கள் விடுதலை முன்ணணி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க் பாராளுமன்றில் இன்று (10) உரையாற்றறும் போது இதனை கூறினார். ஆகவே எப்படியாவது தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

Xi Jinping

சீன ஜனாதிபதியாக ஷி ஜின்பிங் (Xi Jinping) தொடர்ந்து மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு இதுவரை இல்லாத வகையில், கடந்த ஒக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக 69 வயதான ஷி ஜின்பிங் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சீன நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 14 ஆவது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 3,000 உறுப்பினர்கள் மீண்டும் சீன அதிபராக ஷி ஜின்பிங்கை தெரிவு செய்ய ஆதரவளித்துள்ளனர். ஷி […]

நேபாளத்தின் புதிய ஜனாதிபதி

நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக எதிர்க்கட்சி வேட்பாளர் ராம் சந்திர பௌடேல் (Ram Chandra Paudel) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ராம் சந்திர பௌடேல் எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராவார். இது பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியான CPN-UML கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, அந்தக் கட்சி வேட்பாளருக்கு எதிராக பௌடேலுக்கு ஆதரவு அளித்த பிரதமா் புஷ்ப கமல் பிரசண்டாவுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகக் கருதப்படுகிறது. நேபாளத்தின் தற்போதைய அதிபா் வித்யா தேவி பண்டாரியின் பதவிக்காலம் இம்மாதம் 12 […]

ஜனநாயகம் எனக் கூறிக்கொண்டு, ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சி

ஜனநாயகம் எனக் கூறிக்கொண்டு, ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியிலும் நாட்டை சீர்குலைக்கும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கைகள் எமது நாட்டுக்கே பாதிப்பாக அமையும். எனவே, சந்தர்ப்பவாத அரசியலை விடுத்து, நாட்டை மீட்க எதிரணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்தார். வெற்றிபெற்றவரையும், முயற்சித்து தோல்வி அடைந்தவர்களையுமே வரலாறு நினைவில் வைத்திருக்கும். மாறாக வேடிக்கை பார்ப்பவர்களுக்கு […]