“We’re waiting for you” – மெசிக்கு உயிர் அச்சுறுத்தல்

உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் லியனோல் மெசியின் மனைவியின் குடும்பத்தினரின் வியாபார நிலையத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத போதும் துப்பாக்கிதாரி “மெசி நீ வரும் வரை காத்திருப்போம்” (“We’re waiting for you”) என எழுதி சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 14 […]
Kachchathiv festivals today and tomorrow

இலங்கை – இந்திய பக்தர்களின் பங்களிப்புடன் கச்சை தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பமாகி நாளை நிறைவடைய உள்ளது. இந்த முறை இந்திய பக்தர்கள் சுமார் 1000 பேர் வரையில் கலந்துக்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். எனவே இலங்கை – இந்திய பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை பக்தர்களுக்காக குறிக்கட்டுவானில் இருந்து விசேட படகு சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய வரி சீர்திருத்தம்-IMF

ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கிளை இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமையப்பெற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளையின் சிரேஷ்ட பிரதானி Peter Breuer, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை கிளையின் தலைமை அதிகாரி Masahiro Nozaki ஆகியோர் ஒன்றிணைந்த அறிக்கையொன்றை விடுத்துள்ளனர். அரசாங்கத்தின் […]
அடுத்த 5 ஆண்டு இலக்கு…(Photos)

பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான தேவை ஏற்பட்டுள்ள இக்காலத்தில், ஒன்றிணைக்கப்படும் டிராக்டர்கள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் […]
ஹரி தம்பதியினரை வீட்டை விட்டு வெளியேறும்படி கோரிக்கை!

ஃபிராக்மோர் (Frogmore Cottage) வீட்டை விட்டு வெளியேறும்படி இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகனுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டதாக தம்பதியரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். பெர்க்ஷயரில் உள்ள வின்ட்சர் கோட்டைக்கு அருகில் உள்ள 17 ஆ ம் நூற்றாண்டின் ஃபிராக்மோர் வீட்டை விட்டு வீட்டை விட்டுக்கொடுக்குமாறு தம்பதியினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹரியின் சுயசரிதையான ஸ்பேர் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, இந்த நடவடிக்கைக்கு, மன்னர் சார்லஸ் ஒப்புதல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
நீதி அதன் கடமையை செய்யும்

கிரேக்கத்தில் பதிவான மிகவும் துயரமான பேரழிவுகளில் ஒன்றான 43 உயிர்கள் காவு கொள்ளப்பட்ட ரயில் விபத்து ஒரு ”மனிதத் தவறு” என அந்நாட்டு பிரதமர் Kyraikos Mitsotakis தெரிவித்துள்ளார். கிரேக்கத்தில் ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தை சென்று பார்வையிட்டதன் பின்னர் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதேநேரம், அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் பதவி விலகியுள்ளார். நேற்று முன்தினம்(28) கிரேக்கத்தின் வட பகுதியில் 350 பயணிகளுடன் பயணித்த ரயிலொன்று […]
மலையக சிறுவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.லெட்சுமனார் சஞ்சய்

உலக வங்கியின் ஊடாக மலையக பெருந்தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் காணப்படும் சிறார்களுக்கு போஷாக்கான சத்துணவு வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதை படம் பிடித்து விளம்பரம் தேடிக்கொள்வதும் மலையக சிறார்களை போஷாக்கத்தரிப்பது எம் சமூகத்தை நாமே இழிவுபடுத்துவது போல காணப்படுவதாக மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில் உலக வங்கியின் நிதியொதுக்கிட்டின் கீழ் மலையகத்தில் காணப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் காணப்படும் 23000 சிறார்களை இழக்கு வைத்து […]
இந்திய மீனவர்கள் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி S.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பாஜக தலைவர் குப்புசாமி அண்ணாமலை அண்மையில் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் மீது […]
கிரீஸ் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா

பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிய விபத்தில் கிரீஸ் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் கோஸ்டாஸ் கரமன்லிஸ் (Kostas Karamanlis) ராஜினாமா செய்துள்ளார். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 43 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் விபத்தில் 72 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு ரயில் நிலைய பொறுப்பாளர் பொறுப்பேற்றாலும், இரண்டு ரயில்களும் எதிர்திசையில் இயக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
ஜனாதிபதி பணிப்பு (Photos)

அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார். இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தலே இதன் நோக்கங்களாகும் என்றும் இதன் மூலம் முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டு வாய்ப்புகளை இலகுவாக இனங்கண்டு கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பணிப்புரைகளை வழங்கினார். முதலீட்டு ஊக்குவிப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள 2023 வரவு […]