சால்வடாரில் சிறைச்சாலையில் உயிரிழந்த 153 பேர்

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் கடந்த ஆண்டு (2022) மார்ச் மாதத்தில் அவசரகால அதிகாரங்கள் நிறுவப்பட்டதில் இருந்து அங்குள்ள சிறைச்சாலையில், குறைந்தது 153 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் மனித உரிமைகள் குழுவான கிறிஸ்டோசல் நேற்று (29-05-2023) வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 4 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்கள் கைது செய்யப்பட்டபோது கூறப்பட்ட குற்றச்சாட்டிற்காக தண்டிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான உயிரிழப்புக்கள் சித்திரவதை மற்றும் கடுமையான காயங்களின் விளைவாக ஏற்பட்டுள்ளதாகவும், பாதிப்பேர் […]

உச்சநீதிமன்றம் உறுதி செய்த சட்டத்தை தான் ஜனாதிபதியானால் அகற்றுவேன்

ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு அமெரிக்க பிரஜாவுரிமையை வழங்கும் ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு அமெரிக்க பிரஜாவுரிமையை வழங்கும் சட்டத்தை இரத்துச்செய்வேன் என மீண்டும் பிரச்சாரங்களை ஆரம்பித்த அமெரிக்காவின் முன்னாள் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 125வருடங்களிற்கு முன்னர் அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதி செய்த சட்டத்தை தான் ஜனாதிபதியானால் அகற்றுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அன்றைய தினமே ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளின் பிள்ளைகளிற்கு அமெரிக்க பிரஜாவுரிமை கிடைப்பதை […]

மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

உலகில் முன்னணி சேவை நிறுவனங்களுள் ஒன்றான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக, மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (31.05.2023) அமைச்சில் நடைபெற்றது. பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். அத்துடன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, […]

ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு சீனாவின் முழு ஆதரவு

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக சீன துணை அமைச்சர் நேற்று (30) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போது தெரிவித்தார்

எதிர்பாராதவிதமாக டெங்கு தீவிரமடைகிறது

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையே டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு வழிவகுத்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 38,639 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

சீனாவின் அடுத்த திட்டம் இதுவா?

2030-ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு மனிதா்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வது மட்டுமன்றி, வேற்று கிரகத்திற்கு மனிதா்களை அழைத்துச் செல்வதற்கான தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொள்வது இந்த திட்டத்தின் நோக்கமாகும். நிலவு உருவானது எவ்வாறு, அதில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பன தொடர்பான கூடுதல் விபரங்களை இந்த திட்டத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என சீன விண்வெளி ஆய்வு மையத்தின் பிரிவான CMSA (China Manned Space Agency) தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் […]

தோல்வியில் முடிந்த வடகொரியாவின் முயற்சி

முதல் உளவு செயற்கைக்கோளை ஏவும் தமது முயற்சி தோல்வியடைந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. இந்த தகவல் வட கொரியாவின் மத்திய செய்தி நிறுவனத்தினால் வௌியிடப்பட்டுள்ளது. உளவு செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடலில் வீழ்ந்துள்ளது. வட கொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்துவதாக அறிவித்ததால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். வட […]

முரண்பாடுகளை ஏற்படுத்த திட்டமிட்ட குழு

முரண்பாடுகளை ஏற்படுத்த திட்டமிட்ட குழுவொன்று முயற்சிப்பதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

A.லோரன்ஸ்  காலமானார் – கொட்டகலை கமர்சியல் மயானத்தில் நல்லடக்கம்

மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் A.லோரன்ஸ்  தனது 71 ஆவது வயதில் காலமானார். பேராதனை போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், அன்னார் காலமானார். 1952 ஆம் ஆண்டு பிறந்த அவர்  தமது ஆரம்ப கல்வியை தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட பாடசாலையில் கற்றார். 1970 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த அன்னார், கொழும்பு பல்கலைக்கழத்தில் தமது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர்  சேவை […]

நலப் பயனாளிகளுக்கு அறிவிப்பு

நலப் பலன்கள் சட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என சமூக நலப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது. 25 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் 100 வீதமான தெரிவுக்குழு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் குறிப்பிட்டார். பெயர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும் என பி. விஜயரத்ன மேலும் தெரிவித்தார்.