அழிவின் விழிம்பில் ஈரான்

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போர் மூண்டுள்ளதால் ஈரான் அழிவின் விழிம்பில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆப்கானுக்கும் ஈரானுக்கும் இடையில் பல காலமாக ஒப்பந்தம் ஒன்று நிலவி வருகின்றது. இதனடிப்படையில், 1880,1972, 1973 என இந்த ஒப்பந்தம் தொடர்ந்து வருகிறது. அவை ஹெல்மெந் ஆறிலிருந்தே ஆரம்பமானது இது ஈரானுக்கும் ஆப்கானிஸ்த்தானுக்கும் பொதுவாக பாயும் ஆறு ஆகும். இந்த ஆறிலிருந்து நீரை சமமாக பெறுவதற்கே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.அதில் 1973ஆம் ஆண்டு செய்யப்பட்ட […]

காரிலே வாழ்க்கையை வாழ்ந்த இளம் பெண்

கனடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய டெஸ்லா காரிலே வாழ்க்கையை வாழ்ந்து வரும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைந்த செய்துள்ளது. டிக்டாக் பிரபலமான ஸ்டெபானி என்ற இளம் பெண் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விட்டு விட்டு தனது செல்ல பிராணியுடன் காரில் வாழ்ந்து வருகின்றார். இவர் சமூக வலைதளத்தில் Little Happy Girl என்ற பெயரில் கணக்குகளை வைத்துள்ளார். இவர் சுதந்திரமாக வசிக்க வேண்டும் என்பதற்காகவே இவர் தனது காரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் வசித்து […]

காட்டுத் தீ காரணமாக 14000 பேர் இடம்பெயர்வு

கனடாவின் ஹாலிபெக்ஸ் பகுதியில் காட்டுத் தீ காரணமாக 14000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். கடுமையான வெப்பத்துடனான காலநிலை மற்றும் பலத்த காற்று ஆகிய காரணிகளினால் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. காட்டுத்தீ கட்டுக்கு அடங்காத நிலையில் காணப்படுவதாக நகர நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மழை வீழ்ச்சி ஏற்படும் சாத்தியங்கள் இல்லாத காரணத்தினால் காட்டுத் தீ பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு ஒரு வாரம் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு ஹெலிகொப்டர்களும் தீயணைப்புப் […]

ரொறன்ரோவில் வெப்பநிலை அதிகரிப்பு

ரொறன்ரோவில் இந்த ஆண்டில் நிலவிய மிக அதிகளவு வெப்பநிலை எதிர்வரும் நாட்களில் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏழு நாட்களில் பகல் நேரத்தில் 26 முதல் 29 பாகை செல்சியஸ் வரையில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையாக ஆண்டின் இந்தப் பகுதியில் நிலவும் வெப்பநிலையை விடவும் கூடுதல் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் 15 முதல் 17 பாகை செல்சியஸ் அளவில் […]

மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தமது வசதிக்காக அன்றி மாணவர்களின் வசதி மற்றும் நலன் கருதி செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இதன்படி, குறைந்தது 75 மாணவர்களாவது பரீட்சைக்குத் தோற்றத் தகுதி பெற்றிருந்தால், அந்தப் பாடசாலையை பரீட்சை நிலையமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பரீட்சை […]

கிங்ஸ்க்கு மீண்டும் மகுடம்

CSK அணி  5 ஆவது முறையாகவும் IPL சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அகதபாத் மைதானத்தில் நேற்றிரவு நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் (GT) அணியை டக்வர்த் லூயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் CSK வென்றது. இதன்மூலம் IPL 2023 தொடரில் 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. 215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் ஷமி வீசிய முதல் ஓவரில் 3 பந்துகளை ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்து ஒரு […]

ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும்(Photos)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. வெகுசன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நினைவு முத்திரையும் கடித உறையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு […]

எவரஸ்ட் மலை உச்சியை அடைய வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவர்

எவரஸ்ட் மலையின் உச்சியை அடைந்து விட வேண்டும் என்ற வாழ் நாள் கனவை நினைவாக்கிக் கொள்ளும் நோக்கில் ஈடுபட்டிருந்த முயற்சியின் கனடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் வான்கூவரைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 63 வயதான பீட்டர் ஸ்வாட் என்ற நபவரை மலை ஏறிக்கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக கடமையாற்றிய ஸ்வாட் இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது ஒன்பது வயது முதலே எவரஸ்ட் மலை உச்சியை அடைய வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவர் […]

கனடாவில் மூன்று ஆண்டுகளாக பணி செய்து வந்த இந்தியர்…..

கனடாவில் மூன்று ஆண்டுகளாக பணி செய்து வந்த இந்தியர் ஒருவரை ஒரு மாதமாகக் காணவில்லை. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (Nidamanuri Sridhar, 26), கனடாவின் மொன்றியலிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அவர் அலுவலகத்துக்கு வராததால், அவரது அலுவலக ஊழியர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, அவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதர் காணாமல் போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அவருக்கு என்ன […]

சீனாவில் ஒரு வினோதமான வேலை

சீனாவில் ஒரு பெண் ஒருவர் வினோதமான வேலை செய்து அதன் மூலம் மாத சம்பளம் பெற்று வருகிறார். அங்குள்ள நியானன் என்ற 40 வயது பெண் சுமார் 15 ஆண்டுகள் செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த வேலை மிகுந்த அழுத்தம் நிறைந்ததாக இருந்துள்ளது. தினசரி எப்போதும் செல்போன் அழைப்புகள் வந்து நிம்மதி இல்லா வாழ்க்கையை தருவதாக மன உளைச்சளுக்கு அவர் ஆளானார். இதை கவனித்த நியானனின் பெற்றோர், அவரிடம் மனம் விட்டு பேசி ஒரு […]