வசூல் சாதனையாளன் “ஜெயிலரை” தடை செய்ய கோரி உயர்நீதி மன்றில் மனுதாக்கல்!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கிற ஜெயிலர் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அதுபற்றிய பரபரப்பான விபரம் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் […]
தேங்காய்க்குள் தேக்கு! கடத்தியவருக்கு விலங்கு!

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கெப் வாகனத்தினுள் சூட்சும்மான மறைத்து கடத்தப்பட்ட தேக்க மரக் குற்றிகளை யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர். சாவகச்சேரி நகர் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் 2:30 மணியளவில் தேக்கம் குற்றிகள் மீட்க்கப்பட்டதோடு முல்லைத்தீவைச் சேர்ந்த 33 வயதான சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். 3 இலட்சம் பெறுமதியான 13 தேக்க மரக்குற்றிகள் இதன்போது மீட்க்கப்பட்டுள்ளன. சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான […]
கணவன் துன்புறுத்தல் தாங்காத மனைவி வாழ்வதை முடித்த சோகம்! ” அம்மா ” எங்கே என தேடும் குழந்தை..

( வாஸ் கூஞ்ஞ) ஒரு குழந்தையின் தாயான இளம் பெண் கடன் தொல்லை மற்றும் பிரிந்து வாழும் கணவனால் இடையிடையே துன்புறுத்தலுக்கு உள்ளாகிய காரணத்தினால் மன விரக்தி அடைந்த நிலையில் தற்கொலைக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மன்னார் வங்காலை நறுவலிக்குளம் மாதிரி கிராமத்தில் வியாழக்கிழமை (17) இரவு இடம்பெற்றுள்ளதாக மரண விசாரனை மூலம் தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக இறந்தவரின் தாயானவரிடம் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரனை மூலம் தெரியவருவதாவது இறந்தவர் திருமதி றெஜினோல்ட் வாசுகி. (வயது 22.) ஐந்து […]
நிச்சயம் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும்

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்தச் சூழலில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கொண்டுள்ள நான்கு அணிகளை […]
இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக M.A சுமந்திரன்

கடந்த வாரம் இலங்கை பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இவ் இலங்கை பிரித்தானியா நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இக் கூட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
போதை வஸ்து பாவனை மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்!

அஸ்ரப் அலீ காத்தான்குடியில்போதை வஸ்து பாவனை மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக காத்தான்குடியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீதியில் இறங்கி போதை வஸ்து பாவனைக்கு எதிராகவும் போதைவஸ்து விற்பனையாளர்களுக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சத்திய பிரமாணத்திலும் ஈடுபட்டனர். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சகல அமைப்புக்களுடனும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பாரிய ஆர்ப்பாட்டம் காத்தான்குடி முகைதீன் பெரிய மெத்தை ஜும்மா பள்ளிவாயல் மற்றும் புதிய காத்தான்குடி அக்சா ஜும்மா […]
வவுனியாவில் இரு மாணவர்கள் உயிரழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை கோரும் ஆளுநர் !

அஸ்ரப் அலீ பாடசாலைகளுக்கான வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பற்ற விவசாயக்கிணற்றில் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.திருமதி சார்ள்ஸ் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நேற்று (17) இடம்பெற்ற வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்ட 14, 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தமைக்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.திருமதி […]
குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா! சலசலப்பு கட்டுப்பாடுத்திய பொலிசார்!

ப.நாகேந்திரன் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா இன்று (18/08/2023 )நடைபெற்றது குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு அமைதியான முறையில் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த பகுதிக்கு வருகைதந்த குருந்தி விகாரை விகாராதிபதியின் வருகையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. #Kurunthoormalai ‘kurundi vihara’ Buddhist monk Galgamuwa santhabodhi entered the area where the Tamil people were peacefully engaged in Pongal worship as per the […]
கிழக்கு மாகாண கொடி திருத்தியமைக்கப்பட வேண்டும் ஹரீஸ் MP ஆளுநரிடம் வேண்டுகோள்!!

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் கலாச்சார விடயங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சபையின் கொடி சீர்செய்ய கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ.ல.மு.கா பிரதித்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு கடிதமொன்றை இன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்று மாகாணத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை முன்னெடுத்துவரும் பணியின் மற்றுமொரு அங்கமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இன மக்களினதும் அடையாளங்களை […]
மத்திய மாகண குடிநீர் வழங்கல் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடிய அமைச்சர் ஜீவன்

(நூரளை பி. எஸ். மணியம்) மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் நகர, கிராம பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் இணைப்புகள் குறித்து, நீர்வழங்கல், வடிகாலமைப்பில் உள்ள குறைப்பாடுகள் சம்பந்தமாகவும், சுகாதார பாதுகாப்பான நீரை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை பற்றியும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு பொறிமுறையை தயாரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி பேசப்பட்டு, தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் […]