மதுரை – கட்டுநாயக்கா Spice Jet விமான சேவை ஆரம்பம்!
இந்தியாவில் மதுரை மற்றும் கட்டுநாயக்கா விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமான சேவையை SpiceJet மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, 30 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் SG-003 என்ற தனது முதலாவது விமானம் நேற்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமானம் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.50 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் புதன்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் இந்தியா – கட்டுநாயக்கா மற்றும் […]
விறகு சேகரிக்க சென்ற 16 வயது சிறுவன் குளவி கொட்டில் மரணம்! பம்பரகலையில் துயரம்!
( நூரளை பி. எஸ். மணியம்) நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற இளைஞர்கள் மீது குளவிக் கொட்டியதில் 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். மேலும் அறுவர் குளவி கொட்டுக் குள்ளாகி சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு இதில் மூவர் சிசகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் […]
புலம்பெயர் முதலீடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் – கருணா அம்மான் சந்திப்பு!
கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) கலந்துரையாடினார். இச்சந்திப்பு கடற்றொழில் அமைச்சில் இன்று(21.08.2023) நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது புலம்பெயர் நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். சர்வதேச சந்தைகளுக்கு கடலுணவுகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணிகளை பெற்றுக்கொள்வதுடன், கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினையும் வலுப்படுத்த முடியும் என்பதை அதிகாரிகள் […]
இலங்கை பத்திரிகை ஆசியர் சங்கத்தின் பொருளாராக ஊடக ஜாம்பவான் ஸ்ரீகஜன் நியமனம்!
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள வீரகேசரி நாளிதழ் மற்றும் வார வெளியீட்டின் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அஞ்சலோவின் நிதான ஆட்டம் ! LPL கிண்ணம் கண்டி வசம்! ரசிகர்கள் பரவசம்!!
LPL2023 T20 கிண்ணத்தின் இறுதி போட்டி இன்று கொழும்பு R பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைப்பெற்றது தம்புள்ள அரோரா – பி லவ் கண்டி அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தம்புள்ள அரோரா முதலில் துடுப்பெடுத்தாடியது. தனது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது இதில் தனஞ்ஜெய டி சில்வா. 49 ஓட்டங்கள், சதிர சமரவிக்ரம 36 ஓட்டங்கள் , குசல் பெரேரரா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்கள்.. வெற்றி இலக்கான 148 […]
ஜீவன் பின்னால் திரண்டது இளைஞர் படை! மிரண்டது நிர்வாகம் ! மாத்தளை ரத்வத்தை பிரச்சினை தீர்வு!
மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் இணங்கியுள்ளது. அத்துடன், குறித்த உதவி முகாமையாளரால் அடித்து நொறுக்கப்பட்ட வீட்டுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து கொடுக்கவும் நிர்வாகம் இணங்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தோட்ட மக்களிடம் பகிரங்கமாக நிர்வாக தரப்பினர் மன்னிப்பு கோரியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது முகநூலில் கூறி இருக்கிறார். […]
மக்கள் வெள்ளத்தில் ” மலையகம் 200′ வரலாறு நூல் அறிமுக விழா!
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் கலாபூசணம் இரா சுப்பிரமணியம் எழுதி வெளியிட்ட மலையகத் தமிழர்களின் இருநூறு வருட வரலாறு என்ற நூல் அறிமுக விழா இன்று( 20 – 8-2023) நடைபெற்றது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சிறப்புரை ஆற்றினார் விழாவினை திரு யோ புரட்சி தொகுத்து வழங்கினார் திருமதி சிவகுமார் திலகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார் கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் திரு பெருமாள் கணேசன் நூல் ஆய்வு […]
அம்பாறை மாவட்ட ஊடக போரத்தின் நிர்வாகத்தில் மாற்றம்! ஊடகவியலாளர்கள் கெளரவிப்பு!
(இப்னு ஷெரீப்) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஆறாவது மாநாடும் ஊடகவியலாளர் கௌரவிப்பைம் போரத்தின் தலைவர் கலாபூசனம் எம்.ஏ.பகுர்டீன் தலைமையில்இன்று (20) அக்கரைப்பற்று எய்ம்ஸ் சர்வதேச பாடசாலை கேட்போர் கூடத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்ரசிறி பிரதம அதிதியாகவும், தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கே.குணராசா சிறப்பு அதிதியாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறைத பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் கௌரவ […]
சுகார அமைச்சர் கெஹலியவிற்கு எதிராக கையெழுத்து வேட்டை!
( நூரளை பி.எஸ். மணியம்) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்லவுக்கு எதிராக பத்து இலட்சம் கையொப்பங்களை சேகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் பொதுமக்களிடம் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (19) தலவாக்கலை லிந்துலை பிராந்திய வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் அசோக சேபால தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
மலையக மக்களின் பொறுமையை சோதிக்காதீங்க! திகா எச்சரிக்கை
மலையக மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார் மாத்தளை எல்கடுவ ரத்துவத்தை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மலையக மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அவர்கள் அமைதி காக்கின்றார்கள் என்பதற்காக கையாளாதவர்களாக தோட்ட நிர்வாகங்கள் கருதி விடக்கூடாது அவர்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்தால் தோட்ட நிர்வாகங்கள் தோட்டத்தை விட்டு செல்ல […]