கனடாவில் குரங்கம்மை நோய் தாக்கம்
கனடாவில் குரங்கம்மை நோய் தொடர்பில் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகில் கூடுதலாக குரங்கம்மை நோய்த் தாக்கம் பதிவாகும் பத்து நாடுகளின் வரிசையில் கனடாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரையிலான காலப் பகுதியில் 89308 குரங்கம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கனடாவில் இதுவரையில் 1440 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.
நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம் – விபத்து
மலேசியாவின் லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்துக்கு தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் இரு விமானிகள் உள்பட 8 பேர் பயணம் செய்தனர். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனால் அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானி முயன்றார். அதன்படி சிலாங்கூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தார். நெடுஞ்சாலையில் இறங்கியபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் […]
மலையக அரசியல்வாதிகளும் வரட்டு கௌரவத்தை விட்டு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – திருமுருகன்
(நூரளை பி. எஸ். மணியம்) 200 வருடங்கள் வரலாற்றை கொண்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் உணர்வு பூர்வமாக செயல் பட முன்வரவேண்டும். பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இலங்கையை கட்டியெழுபி வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். என்பதில் மிகவும் அக்கறையுடன் செயல்படுகின்றார். இதற்க்கு மலையகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது வரட்டு கௌரவத்தை ஓரங்கட்டிவிட்டு இதற்க்கு முழு ஒத்துழைப்பு வழங்க […]
தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு
(நூரளை பி. எஸ். மணியம்) ‘ தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது. நிரந்தரமான விலைசூத்திரமொன்று எதிர்வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும். அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும்.” – என் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொழும்பு அமைச்சில் நேற்று (17)வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எம்மிடம் உள்ள 324 நீர் உற்பத்தி நிலையங்களில் 2 […]
கொலம்பியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கி.மீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பின் அதிர்வும் ஏற்பட்டது. இதுவும் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயரமான கட்டிடங்களில் வசித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை […]
கனடாவின் வடமேற்கு மாகாணங்களிலும் கட்டுங்கடங்காமல் பரவும் காட்டுத்தீ
ஹவாய் காட்டுத்தீ விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டிய நிலையில் கனடாவின் வடமேற்கு மாகாணங்களிலும் கட்டுங்கடங்காமல் காட்டுத்தீ பரவுகிறது. தெற்கு மற்றும் வடமேற்கு ஸ்லேவ் பகுதிகளில் நிலைமை கைமீறி போனதாக கனேடிய அரசாங்கம் அறிந்துள்ளது. காட்டுத்தீ பரவி இருக்கும் பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தி மீட்புப்பணியில் மீட்பு பணிவீரர்களை கனடா களம் இறக்கியுள்ளது. ஹவாய் தீவுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் விஜயம் இந்நிலையில் தீயியல் கருகிய ஹவாய் தீவுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் செல்ல உள்ளார். பசிபிக் […]
குருந்தூர் மலையில் பொலிஸார் குவிப்பு! பௌத்த வழிப்பாடுகள் ஆரம்பம்!
அஸ்ரப் அலீ குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் 5 பஸ்களில் மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையிலே வழிபாடுகளில், ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்திலே இன்றையதினம் பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் 03 பஸ்கள் மற்றும் 02 ஹன்ரர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக கொண்டு வரப்பட்டிருக்கின்றார்கள். […]
LPL2023 கிண்ணத்தின் இறுதி போட்டிக்கு தம்புளளை அணி தகுதி! யாழ்ற்கு இம்முறை வாய்ப்பில்லை !
LPL2023 கிண்ணத்திற்கான இறுதி போட்டியில் விளையாடும் தகுதியை தம்புள்ளை ஆயோரா அணி பெற்று இருக்கிறது. இன்று காலி டைட்டன்ஸ் அணிக்கெதிராக களமிறங்கிய தம்புள்ளை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதுடன் முதலில் காலி அணியை ஆட சொன்னது. காலி அணி தனது 20 ஓவர்களில் 146 ஓட்டங்களை மட்டுமௌ பெற்றது.இதிலு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லசித் குரோசபுள்ளே சிறப்பாக ஆடினார் . அவர் 80 ஓட்டங்கள், பந்து வீச்சில் ஹேய்டன் கீர். மூன்று விக்கெட்டுகளையும் நூர் இரண்டு […]
வவுனியாவில் இரு மாணவர்கள் நீர்க்குழியில் விழுந்து பலி
அஸ்ரப் அலீ வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியானது வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது நீர் நிரம்பிய குழியொன்றுக்குள் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியாப் பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இரண்டாவது தினமான நேற்றும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்நிரம்பிய குழியொன்றுக்குள் […]
ஹோமாகம தொழிற்பேட்டையில் பாரிய தீவிபத்து! தீயணைப்பு படை களத்தில்
அஸ்ரப் அலீ ஹோமாகம தொழிற்பேட்டையில் இன்று முன்னிரவு தொடக்கம் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது ஹோமாகம, கட்டுவன பிரதேசத்தில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது இதனையடுத்து பாதுகாப்பு முன்னேற்பாடாக ஹோமாகம மற்றும் கட்டுவனை பிரதேசங்களுக்கு வௌியார் வருகை தருவதைத் தவிர்க்குமாறும் பிரதேசத்தில் வசிப்பவர்கள் முகமூடி அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அத்துடன் குறித்த பிரதேசங்களில் இருக்கும் குடிநீர்க் கிணறுகளை மூடிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது