கிழக்கு மாகணத்தில் மதங்களின் ஒற்றுமையை காக்க வேண்டியது என் பொறுப்பு! விகாராதிபதிகளை சந்தித்த ஆளுநர் தெரிவிப்பு!

சந்திரகுமார். நிலாவெளியில் அமைக்கப்படவிருந்த விகாரை தொடர்பாக, உரிய விகாரைகளுக்கு சென்று, அங்குள்ள விகாராபதிகளை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்துள்ளார். விகாராதிபதி மைத்திரி மூர்த்தி மஹாநாயக்க தேரர் மற்றும் விகாராதிபதி ராக்ஷபதி அகுங்கல்லே விமல தம்ம திஸ்ச மஹாநாயக்க மஸ்த்ரவில அமரபுர மூலவன்ச பார்சவய  தேரர்களிடம் ஆசியை பெற்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது விளக்கத்தை கூறி இருக்கிறார். திருகோணமலை நிலாவெளி இழுப்பை குளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த […]

மட்டக்களப்பில் சர்வதேச இளைஞர் தின நிகழ்வு.

(இப்னு ஷெரீப்) சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண இளைஞர் தின நிகழ்வு அண்மையில்  புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில்(தேசியப் பாடசாலை) நடைபெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எம்.பி.சரத் சந்ரபால தலைமியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம வளவாளராக மட்டக்களப்பு உயர்  தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் பணிப்பாளர் எஸ்.ஜயபாலன் கலந்து கொண்டு சர்வதேச இளைஞர் தினத்தின் முக்கியத்துவம், மற்றும் தொழிற்திறன்கள்  பற்றி விரிவுரையாற்றினார். இந்நிகழ்வில் […]

கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்” பரிசளிப்பு விழா!

C..G .பிரசாந்தன், எம் நாசார் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை “கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்” 2022 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்றைய தினம் அதிபர் திருமதி. V. சாந்தினி சர்மா அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு வலயக் கல்வி பணிப்பாளர் . P.R. தேவபந்து அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக, பிரதிக் கல்வி பணிப்பாளர் . K. ரஞ்சித் பிரேமதிலக்க மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா […]

கனடா – காட்டு தீ காரணமாக “Yellowknife”லிருந்து 20ஆயிரம் பேர் வெளியேற்றம்!!

கனடாவின் டெரிடோரியான நோர்த் வெஸ்ட் டெரிடோரியல் பகுதிகளில் அதிகமான வெப்பநிலை காரணமாக காட்டு தீ பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு நலன் கருதி 20 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்ததனை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர். இதன்படி இன்கிராம் டிரெயில்,இன் டிட்டா,காம் லேக்,கிரேஸ் லேக், இங்கல் வர்த்தக மைய பகுதியிலிருந்த மக்களே பாதுகாப்பாக அகற்றப்படுகின்றனர்.   Yellowknife residents are evacuating. pic.twitter.com/Qs2rYOsXv1 — +Jon Hansen (@CSsR_Preacher) […]

அம்பாறை கடல் வலைகளில் அதிகளவான கீரி மீன்கள்! மீனவர்கள் கொண்டாட்டம்

(இப்னு ஷெரீப்) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது,  காரைதீவு உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்களில் நீண்டகாலத்திற்குப் பின்னர் கரைவலைக்கு அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இப்பிரதேசங்களில் ஏற்பட்ட பாரிய கடலரிப்பு மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக மீன்பிடித் தொழில் முற்றாக செயலிழந்திருந்தது.  இதனால் இத்தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவருகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அதிகளவான கீரி மீன்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் கரைவலை மீன் […]

ஜெயிலர் பாட்டுக்கு ஆடிய லெஜண்ட் சரவணன்! புதிய படம் ஜனவரியில்!

சரவணன் ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது.ஆனாலும் அவரது சினிமா லுக் இன்றைய இளசுகளையும் கவர்ந்து இழுத்து இருக்கிறது. .ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக அவர் சிறுவர் முன்பள்ளி பாடசாலைக்கு சென்று குழந்தைகளுடன் குழந்தையாக ஆடி பாடி பரிசில்களை வழங்கி கொண்டாடினார். மேலும  அவரது புதிய படத்தை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் அதிரடி அக்ஷன் படமாக இருக்குமெனவும் ஜனவரி மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் […]

“ஐ”க்குள் “கை” வைத்த லைக்கா! 2 வருடங்களுக்கு ஒளிப்பரப்பு நேர குத்தகை – பந்துல்ல நம்பிக்கை!!

இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் கீழ் இயங்கும் செனல் “eye”  நிறுவனத்தை லைக்கா நிறுவனத்திற்கு குத்தகை   கொடுக்க போகும் அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என  ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து , பெருந்தெருக்கல் அமைச்சர்  பந்துல்ல குணவர்தன கூறுகிறார். கொழும்பில்த நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதன கூறினார். மேலும் நட்டத்துடன் இயங்கும்  குறிப்பாக மின்சார கட்டணம் கூட செலுத்த முடியாத  செனல் eye நிறுவனத்தை விற்கவோ குத்தைக்கு கொடுக்கவோ நான் முயற்சிக்கவில்லை. […]

உழைக்கும் மக்களின் உரிமைகளை அழிக்கும் அரசாங்கத்துடன் சம்பந்தம் செய்பவன் நான் இல்லை!! சஜித்

நலீர் அகமட் உழைக்கும் மக்களின் உரிமைகளை அழிக்கும் அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார். மக்களைக் கொல்லும்,மக்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவித உடன்பாடோ அல்லது இணக்கப்பாடோ இல்லை என்றும்,தீவிர இடதுசாரி அல்லது தீவிர முதலாளித்துவ கொள்கையை விடுத்து மூன்றாவது வழியை பின்பற்றும் கட்சியாக இந்நாட்டு மக்களின் மனித உரிமைகள் மட்டுமன்றி பொருளாதார,சமூக மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாத்துக் […]

கொழும்பில் சிறப்பாக நடந்த “ஹிஜ்ரத்” கவி அரங்கு

எம நாசர் . தாருல் ஈமான் இலக்கிய வட்டம் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி – கொழும்பு பிராந்தியம். ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த  “ஹிஜ்ரத்” கவியரங்கம்  நேற்றைய (15-08-2023,) தினம் இடம்பெற்றது   கொழும்பு, தெமட்டகொட வீதியிலுள்ள தாருல் ஈமான் (இஸ்லாமிக் புக் ஹவுஸ்) கேட்போர்கூடத்தில் நடைப்பெற்ற கவியரங்கிற்கு சிரேஷ்ட சட்டத்தரணியும் இலக்கியவாதியுமான கலாபூஷணம். ரஷீத் எம் இம்தியாஸ் தலைமை தாங்கினார். கவியரங்கில் கவிஞர் ரவூப் ஹஸீர் (கொழும்பு) கவிஞர் கஸ்ஸாலி அஷ் ஷம்ஸ் […]

கனடாவில் கலக்கிய தமிழக காவலர்கள்! உதயநிதி நேரில் வாழ்த்து!!!

கனடா நாட்டின் வின்னிபெக் மாகணத்தில் அண்மையில் நடைபெற்ற #WorldPoliceFireGames போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 15 காவலர்களும், தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 4 காவலர்களும் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 21 தங்கம் – 18 வெள்ளி – 15 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மொத்தம் 54 பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்த நம் காவல்துறை – தீயணைப்புத்துறை வீரர் – வீராங்கனையரை  அவர் இன்று  வாழ்த்தியுள்ளார்