காசா பகுதியில் தாக்குதல்கள் தீவிரம்

வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவக் குழுக்கள் காசா பகுதிக்கு அருகில் குவிந்துள்ளன, ஒரு கட்டத்தில் காசா பகுதியை ஆக்கிரமிக்கக்கூடும் என்று போர் விமர்சகர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுமார் மூன்று மில்லியன் […]

பிரித்தானியாவில் புயலில் சிக்கிய விமானம்

பிரித்தானியாவை ஏற்பட்ட புயலில் சிக்கிய விமானம் ஒன்று, தரையிறங்கும்போது, ஓடுபாதையிலிருந்து சறுக்கிச் சென்று புல்வெளியில் இறங்கியுள்ளதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரித்தானியாவை ‘Babet’ என்னும் புயல் துவம்சம் செய்துவருகிறது. புயலுக்கு மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சுமார் 4,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதையும், சில இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடப்பதையும் காட்டி அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் கிரீஸ் தீவுகளில் […]

பசுபிக் கடல் பகுதியில் கரை ஒதுங்கியிருக்கும் விசித்திர உயிரினம்

தென்மேற்கு பசுபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் நேற்று கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. நியூ அயர்லேண்டர்ஸ் ஒன்லீ எனும் முகநூல் பக்கத்தில் இது குறித்த தகவல்கள் முதலில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உயிரினங்கள் “கிளாப்ஸ்டர்” என அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த “கிளாப்ஸ்டர்” உயிரினத்தின் உடல் எடை, நீளம், […]

இஸ்ரேல் மக்களிடம் கணக்கெடுப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் மக்களிடம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் பேர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக திரும்பியிருப்பதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 7 ம் திகதி முதல் கடும் மோதல் நடைபெற்று வருகின்றது. அதன்படி கடந்த 7 ஆம் திகதி காசாவின் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு […]

மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் – உலகநாடுகள்

கடந்த 7 ஆம் திகதி ஆரம்பிக்கபப்ட்ட ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் இன்னும் முடிவுக்குவராத நிலையில் உலகநாடுகள் மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிற்குள் மேற்கொண்ட தாக்குதலின் போது பணயக்கைதியாக பிடிபட்ட இரு அமெரிக்கர்களான, தாயையும் மகளையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கிபுட்ஸ் நகல் ஒஸ்ஸில் ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலின் போது பிடிபட்ட ஜூடித் நட்டாலியா ரானன் இருவரையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. […]

இந்தியாவுக்கு எதிராக திரும்பிய அமெரிக்கா

இந்தியாவிலிருந்து கனடா மேலும் 41 தூதர்களை வெளியேற்றியுள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து என்பன கனடாவின் செயலுக்கு வரவேற்பளித்துள்ளன. கனடாவில் காலிஸ்தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் கனடா – இந்தியா இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இரு நாடுகளில் இருந்தும் பரஸ்பரம் தூதர்கள் வெளியேற்றம் மற்றும் தூதரக விசா நிறுத்தம் என அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பரபரப்பு ஏற்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள தூதர்கள் இருப்பை குறைத்து கொள்ளும்படி இந்தியா வலியுறுத்தி இருந்தது. […]

கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்

இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது. அது தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், “இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இருநாட்டு உறவு மோதல் முற்றியுள்ள நிலையில் இந்தியாவில் கனடாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கு எதிராக எதிர்மறை உணர்வுப்பூர்வ கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. கனடா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் […]

பிளாஸ்டிக் பயன்பாட்டை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

கனடாவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்பில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மரக்கறி வகைகள் மற்றும் பழங்கள் என்பனவற்றின் விலைகள் அதிகரிக்கபடலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பிளாஸ்டிக் பயன்பாட்டு கட்டுப்பாடு தங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவும் இது நடைமுறை சாத்தியமற்றது எனவும் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகள் உற்பத்தியை செய்வோர் தெரிவித்துள்ளனர். சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பயன்பாட்டை வரையறுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பிளாஸ்டிக் பயன்பாட்டை அகற்றுவதனால் பொருட்களின் […]

அட்டனில் இருந்து போடைஸ் நோக்கி பயணித்த பேருந்தில் நடந்த சோகம்

அட்டனில் இருந்து போடைஸ் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பும் போதே குறித்த பேருந்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவர் போடைஸ் தோட்டத்தை சேர்ந்தவர் என்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம்

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன. இந்நிலையில், காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் வருகிற 30-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, […]