உழவு இயந்திரம் ஆற்றில் பாய்ந்து விபத்து

Share

Share

Share

Share

அட்டன் – டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்று (06) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தொழிற்சாலைக்கு விறகு ஏற்றிக்கொண்டிருந்த போது திடீரென் உழவு இயந்திரம் தானாக இயங்கி முன்நகர்ந்துள்ளது.

இதன் போது சாரதி உழவு இயந்திரத்தினை நிறுத்துவதற்கு இயந்திரத்தில் ஏறிய போது தடுக்கி விழுந்தாகவும் அதனை தொடர்ந்து உழவு இயந்திரத்தில் அடிப்பட்டு சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக சம்பவத்தினை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த சாரதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அந்துவன்)

 

33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை
பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை...
கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...